சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மை - சிபிசிஐடி தகவல்
சிவசங்கர் பாபாவுக்கு டேராடூன் மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது உறுதியானது. மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்தது
சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அதன் காரணமாக ஆஞ்சியோ செய்யப்பட்டது விசாரணையில் உறுதியானது.
தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தப்பியோடிய அவர் வேறு ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. . மேலும், சிவசங்கர் பாபா நேபாளத்துக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க உத்தரகாண்ட், டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. சிவசங்கர் இல்லாமல், திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த சிபிசிஐடி போலீசார், டேராடூனில் டேரா போட்டனர். அப்பாடா... போலீஸை ஏமாத்திட்டோம் என டெல்லி காசியாபாத்தில் ஷவர் பாத் எடுத்துக் கொண்டிருந்த சிவசங்கர் பாபா பற்றி, சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!
உடனே டில்லி விரைந்த தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்றிரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடைபெற்றது. பெண் ஆய்வாளர் உட்பட 5 அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வீடியோ பதிவு செய்துள்ளனர். விசாரணையில், சிவசங்கர் பாபாவுக்கு டேராடூன் மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது உறுதியானது. மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்தது. இன்று காலையும் விசாரணை செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதன்பின்பு, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல தகவல்கள் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது.
BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!