கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே ஓடும் ரயிலில் முதன்மை டிக்கெட் பரிசோதகரை மது போதையில் தாக்கிய வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது
அலாபுலாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் தன்பாத் அலப்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நாரன் மகன் ராஜா(35) என்பவர் டிக்கெட் எடுக்காமல் S4 ஸ்லீப்பர் கோச்சில் பயணித்துக்கொண்டு மது அருந்தி உள்ளார். இதனை பார்த்த ரயிலில் பயணித்தவர்கள் பயணச்சீட்டு பரிசோதகருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆலன் என்கிற டிடிஆர் அந்த கோச்சிற்கு சென்று டிக்கெட் இருக்கிறதா ஏன் ரயிலில் அமர்ந்து மது அருந்துகிறாய் எனக் கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த வட மாநில வாலிபர் டிடிஆரை தாக்கியுள்ளார். இதனை அறிந்த முதன்மை டிக்கெட் பரிசோதகரான சென்னை பெரம்பலூர் பகுதியைச் சார்ந்த குடியப்பன் மகன் ஜோதிலிங்கம் (49) சென்று தட்டி கேட்டுள்ளார்.
இருப்பினும் மது போதையில் இருந்த வட மாநில வாலிபர் ராஜா முதன்மை டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்தை கழிவறையில் வைத்து இரும்பு கொக்கியை மூலம் தலையில் பலமாக தாக்கியுள்ளார். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது வட மாநில வாலிபர் ஓடும் ரயிலில் இருந்து மது போதையில் கீழே குதித்துள்ளார். அவருடன் பயணித்த இரு வட மாநில வாலிபர்களும் தப்பி ஓடிய உள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ராஜாவை ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் டிக்கெட் பரிசோதகருக்கும் வட மாநில வாலிபருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவர்கள் டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்திற்கும் வட மாநில வாலிபர் ராஜாவிற்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.























