துணை வட்டார வளர்ச்சி அலுவலரை வழி மறித்து மிரட்டல் விடுத்த திமுக வார்டு கவுன்சிலர்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய அரசூர் ஊராட்சி திமுக வார்டு கவுன்சிலர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நெருங்க உள்ள நிலையில் அரசு அதிகாரியிடம் திமுகவினர் மிரட்டும் போக்கு அதிகரித்து வருவதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் மகேஸ்வரி என்பவர் கடந்த ஐந்தாம் தேதி அரசூர் கிராமத்தில் வீடு கட்டும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டதை ஆய்வு செய்வதற்காக சக ஊழியர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அரசூர் மெயின் ரோட்டை சேர்ந்த திமுகவை கட்சி வார்டு கவுன்சிலர் செல்வேந்திரன் மற்றும் அதே பகுதி சேர்ந்த பாரதிதாசன் இருவரும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எப்படி என்னிடம் தகவல் தெரிவிக்காமல் கணக்கெடுக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய என் பகுதிக்கு வரலாம் என்று கூறி, அவர் சென்ற இருசக்கர வாகனத்தை வழி மறித்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி பெரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த 5 - ம் தேதி புகார் அளித்ததன் பேரில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக வார்டு கவுன்சிலர் செல்வேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் வார்டு கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி வழிமறித்து மிரட்டும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே இருசக்கர வாகனத்தில் பாண்டி சாராயம் கடத்திய ஆறு பேர் கைது - இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்த மதுவிலக்கு காவல்துறையினர் நடவடிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் புதுச்சேரி மதுபானம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், அதனை தடுப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் பாண்டி மதுபானம் தொடர்பாக சீர்காழி மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் படி மதுவிலக்கு போலீசார் ஆலங்காடு, நெய்த வாசல், சூரக்காடு ஆகிய பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தபோது அப்போது சந்தேகத்திற்கு உரிய விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் அந்த நபர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.


இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சந்தோஷ், பிரபாகரன், மணிகண்டன், சுதாகரன், நீதி ராஜன், கவியரசன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, மேலும், அவர்களிடம் இருந்து 450 லிட்டர் பாண்டி சாராயத்தை கைப்பற்றி ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






















