மேலும் அறிய
Advertisement
வீட்டில் ‛மினி டாஸ்மாக்’ நடத்திய நபர் கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்
டாஸ்மாக் கடையில் உள்ளது போல அட்டை பெட்டியுடன் பெட்டி பெட்டியாக ஒரே வரிசை எண் கொண்ட பெட்டியாகவும் உள்ளதால் இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் ஒரு சில காவல் துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த ஆனந்த ஜோதியை கைது செய்த காவல்துறையினர் மதுவிலக்கு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு அருகே பள்ளபட்டியில் கள்ளச்சந்தையில் விற்பனைக்காக வைத்திருந்த 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1355 மது பாட்டில்களை போலீசாரால் பறிமுதல்.
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் முன்கூட்டியே வாங்கிய மதுபானங்களை, கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு விற்கப்படும் மதுபானங்களை வாங்க தேவையின்றி குடிமகன்கள் ஓரிடத்தில் குவியும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் ருபாய் 300 முதல் 400 ருபாய் வரை மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து ஆய்வாளர் சண்முகலட்சு தலைமையிலான போலிசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில் சிப்காட் மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தேவர்நகர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தஜோதி என்பவரது வீட்டில் மதுபான கடையில் விற்பது போன்று பெட்டி பெட்டியாக சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 126- லிட்டர் அளவுள்ள 1355 மது பாட்டில்களை மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடையில் உள்ளது போல அட்டை பெட்டியுடன் பெட்டி பெட்டியாக ஒரே வரிசை எண் கொண்ட பெட்டியாகவும் உள்ளதால் இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் ஒரு சில காவல் துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த ஆனந்த ஜோதியை கைது செய்த காவல்துறையினர் மதுவிலக்கு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion