கடற்கரையில் மசாஜ் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை: கணவரின் கண் முன்னே பிரிட்டன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
பெண்ணுக்கு மசாஜ் தருவதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவா அரம்போல் கடற்கரை அருகே பிரிட்டனை சேர்ந்த பெண் அவரது கணவரின் கண் முன்னே உள்ளூரை சேர்ந்த நபரால் பாலியல் வன்கொடுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு மசாஜ் தருவதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அரம்போல் கடற்கரை அருகே சட்டவிரோத மசாஜ் சென்டரை ஒரு கும்பல் நடத்தி வருகிறது. வெளிநாட்டவர்கள் மத்தியில், இந்த மசாஜ் சென்டர் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இதனிடையே, அந்த கும்பலில் ஒருவராக உள்ள வின்சென்ட் டிசோசா, இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள டிசோசா முன்னதாக பள்ளியில் நூலகராக பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினருக்கு அளித்த புகாரில், தான் கோவாவுக்கு சுற்றுலா வந்ததாகவும் அப்போது ஸ்வீட் வாட்டர் ஏரி அருகே படுத்திருந்த தனக்கு மசாஜ் அளிப்பதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஜூன் 2ஆம் தேதி அரங்கேறியுள்ளது. ஆனால், திங்கள் கிழமைதான் இதுகுறித்து புகாரை அந்த பெண் அளித்துள்ளார். பிரிட்டனில் உள்ள குடும்பத்தினருடன் ஆலோசனை பெற்ற பிறகு, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் உதவியோடு அவர் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே காவல் ஆய்வாளர் விக்ரம் நாயக் தலைமையிலான பெர்னேம் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.
இதுகுறித்து மூத்த காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு அவர் குறித்த தகவல்களை பெற்றோம். தற்போது, அவர் நூலகராக பணியாற்றவில்லை. திங்கள்கிழமை இரவு, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பனாஜிக்கு அருகில் உள்ள மபுசா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை காவலில் எடுப்பதற்காக போலீசார் திங்களன்று உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவார்கள்.
துணை காவல் கண்காணிபப்பாளர் சித்தாந்த் ஷிரோத்கரின் மேற்பார்வையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
மேலும் படிக்க: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்