விஷ சாக்லெட் கொடுத்து 7ம் வகுப்பு மாணவன் கொலை?! விபரீதத்தில் முடிந்த சிறுவர்கள் சண்டை!
அந்த நேரத்தில் என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் என்பதால், நான் அங்கிருந்து சென்றுவிட்டேன் என்றி தந்தை கூறினார்.
7ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உத்வந்த்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோன்புரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த மாணவரின் பெயர் சுபம் குமார் ஷா.
விஷம் கலந்த சாக்லேட்
மளிகை கடை நடத்தி வரும் பக்கத்து வீட்டுக்காரர் தனது மகனை விஷம் கலந்த சாக்லேட்டால் கொன்றதாக அவரது தந்தை சந்தோஷ் ஷா குற்றம் சாட்டினார். மாணவர் இறப்பதற்கு முன்பு கூறுகையில், வியாழக்கிழமை மாலை மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மளிகைக் கடை நடத்தி வரும் ஒரு பெண் தனக்கு சாக்லேட் கொடுத்ததாகக் கூறினார். அதை சாப்பிட்டதும் உடல்நிலை மோசமடைந்தது என்றார்.மகன் கூறியதை தொடர்ந்து, தாங்கள் உடனடியாக சதர் மருத்துவமனைக்கு விரைந்தோம். ஆனால் அவர் வழியில் இறந்துவிட்டதாக மாணவரின் தந்தை சோகத்துடன் கூறினார்.
பழிவாங்கிய பக்கத்துவீட்டு பெண்
இதனைத்தொடர்ந்து, மாணவரின் தந்தை சந்தோஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் குழந்தைகளுடன் எனது மகன் சுபம் வாய் தகராறு செய்து கொண்டிருந்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே சாக்லேட் கொடுத்திருக்கலாம்.கிராமத்தில் சுபம்விற்கு உடல்நிலை மோசமடைந்தபோது, நான் உடனடியாக அந்தப் பெண்ணின் கடைக்குச் சென்றேன். ஆனால், அவளர் கடையை மூடிவிட்டு அவர் வீட்டு மாடிக்குச் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் என்பதால், நான் அங்கிருந்து சென்றுவிட்டேன் என்று கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, டவுன் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சதர் மருத்துவமனைக்குச் சென்று பிரேதப் பரிசோதனை நடத்தினர். மரணத்திற்கான காரணம் விஷப் பொருளாக இருந்ததாகத் தெரிகிறது.
“இந்த விவகாரத்தில் நாங்கள் வழக்கு பதிவு செய்து, வழக்கின் தீவிர விசாரணைக்காக உத்வந்த் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளோம்” என்று வழக்கின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்