மேலும் அறிய

Crime : மகளை கொன்று குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி.. ஆனால் உயிர் பிழைத்த தந்தை... நடந்தது என்ன?

கடன் தொல்லையால், தந்தை மகளை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் வசித்து வரும் ராகுல் என்பவர், ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது வேலையை இழந்துள்ளார். மேலும், கிரிப்டோகரன்சி முதலீட்டில் பல இழப்புகளை சந்தித்துள்ளார். இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல், மிகவும் சிரமப்பட்டு உள்ளார். பின்னர் கடனை செலுத்தவதற்காக, உறவினர்களின் வீட்டில் இருந்த நகையை திருடியுள்ளார்.

குழந்தை கொலை:

நகை காணாமல் போனதால், கண்டுபிடித்து தருமாறு காவல் துறையில் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ராகுல், அவரது மகளை நவம்பர் 15 ஆம் தேதி பள்ளிக்கு கூட்டி செல்வது போன்று, அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்  இருவரும் காணாமல் போனார்கள் என்று தகவல்கள் வெளியானது. 

பின்னர், அடுத்த நாள் காலை, ஏரியில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்ததையடுத்து, காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், ராகுலின் மகள் என்பது கண்டறியப்பட்டது. மேலும் குழந்தையை, அவரது தந்தை தான் கொலை செய்தார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். 

விசாரணை:

அவரிடம் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், அவர் தெரிவிக்கையில் வேலை இழந்து கடன் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், வீட்டிற்குச் சென்றால் எனது குழந்தை அழுகையுடன் காணப்படும். குழந்தைக்கு தேவையான உணவை கூட என்னால் வாங்கி தர முடியவில்லை. அதன் காரணமாகவே குழந்தையும் கொன்றும், நானும் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி செய்தேன் என்றும், ஆனால் குளத்தில் அதிக தண்ணீர் இல்லாததால், அங்கிருந்து ஓடி சென்று விட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மகளை தந்தை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Also Read: தனிநபர் கடன் தருவதாக கூறி கும்பகோணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: Bihar: பிகாரில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தண்டணையாக 5 தோப்புக்கரணம் போட்டால் போதும் என தீர்ப்பு கொடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்திTVK Vijay : தவெகவில் இணைந்த முக்கிய திரை பிரபலம்! கொண்டாடும் தொண்டர்கள்! வெளியான வீடியோ!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Embed widget