Internet Data Plans | தினசரி டேட்டா முடிஞ்சிருச்சுன்னு இனி கவலைவேண்டாம்; இந்த ப்ளான்களையெல்லாம் ஒருமுறை பாருங்க..!
வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு உதவியாக தினசரி வரம்பில்லாத டேட்டா பேக் (No daily data limit) உள்ளிட்ட பல்வேறு அசத்தலான திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளன டெலிகாம் நிறுவனங்கள்
தினசரி 1 ஜிபி டேட்டா முடிஞ்சிருச்சேன்னே கவலைப்படும் வாடிக்கையாளர்களைக்கருத்தில் கொண்டு தினசரி வரம்பில்லாத டேட்டாவினை ஏர்டெல், ஜியோ,வோடபோன் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றினால் ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள் வீட்டில் இருந்து தான் தற்பொழும் பணிபுரிந்து வருகின்றனர். இதோடு மட்டுமின்றி ஊடரங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ற டேட்டா ப்ளான்கள் கிடைப்பது என்பது சிக்கலான ஒன்றுதான். இந்நிலையில் தான் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன் வரிசையில் தற்பொழுது இந்நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் மக்களுக்கு உதவியாக தினசரி வரம்பில்லாத டேட்டா பேக் (No daily data limit) உள்ளிட்ட பல்வேறு அசத்தலான திட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இதன் அம்சங்கள் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்: ஆரம்பத்தில் இருந்தே தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவசத் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து வருகிறது. இதன்படி தற்பொழுது ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ரூ.247 ப்ரீபெய்டு திட்டத்தில் தினசரி பயன்படுத்தப்படக்கூடிய டேட்டாக்களுக்கு எவ்வித வரம்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் ரூ.247-க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது மொத்தமாக 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதானல் தினசரி 1 ஜிபி முடிந்துவிட்டது என்று இனி கவலைப்பட வேண்டாம். ஒருவேளை இத்திட்டத்தினைப்பெற்று நீங்கள் ஒரே நாளில் கூட 25 ஜிபி டேட்டாவினைப்பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். இதோடு ஜியோவின் ரூ.247 ப்ரீபெய்டு திட்டத்தில், தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டெட் அழைப்புகளையும் பெறமுடியும். மேலும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இத்திட்டத்தில் jio Tv, Jio news, Jiocloud மற்றும் Jio security போன்றவற்றையும் பெற முடியும்.
ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்டு திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த ப்ரீபெய்டு திட்டத்தில் மொத்தமாக 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா என்ற பேச்சுக்கே இதில் இடம் இல்லை. நீங்கள் இந்த 30 ஜிபியினை எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதன் வேலிடிட்டி முடிவதற்குள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதோடு ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதோடு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, Apollo 24/7 Circle, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வோடபோன் ஐடியாவின் ரூ. 267 ப்ரீபெய்டு திட்டம்: இத்திட்டத்தை பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் 25 ஜிபி டேட்டா மொத்தமாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்குவதுப்போல தினசரி டேட்டா என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மேலும் இத்திட்டத்தினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்புகள், Vi Movies &Tv அணுகல் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றனர்.