Share Market : வாரத்தில் முதல் நாளே தள்ளாடும் இந்திய பங்குச்சந்தை...முழு விவரம் இதோ...
Share Market : வாரத்தில் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் சரிவுடனும், நிஃப்டியானது ஏற்றத்துடனும் தொடங்கியுள்ளது.
Share Market : வாரத்தில் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் சரிவுடனும், நிஃப்டியானது ஏற்றத்துடனும் தொடங்கியுள்ளது.
இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 56.91 புள்ளிகள் குறைந்து 61,738.13 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 12.80 புள்ளிகள் அதிகரித்து 18,362.50 புள்ளிகளாக உள்ளது.
லாபம்-நஷ்டம்
இன்போ ஏஜ், டாடா மோட்டார்ஸ், எச்சிஎல், யுபிஎஸ், அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், மனப்புறம் ஃபிலிம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சன்டிவி நெட்வொர்க், ஐசிஐசி பங்க், ஐடிசி, எச்டிஎஃப்சி, ஓஎன்ஜி, நெஸ்டல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
அமெரிக்காவின் தாக்கம்:
உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம், கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகித கிடுபடியை கைவிட கூடும் சூழல் நிலவுகிறது. இதனால் வெளிநாட்டு முதலீடு, இந்திய பங்குச் சந்தையில் அதிகரிக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தாக்கம்
மேலும், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. கச்சா எண்ணெயை 80 சதவிகிதம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இதனால் ஆதாயம் ஏற்படும். இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Rupee rises 25 paise to 80.53 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) November 14, 2022
இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 25 காசுகள் அதிகரித்து 80.53 ரூபாயாக ஆக உள்ளது.