Share Market : கொரோனா தொற்று எதிரொலி; சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை; 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது சென்செக்ஸ்!
Share Market : இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி உள்ளது.
Share Market opened : இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
வாரத்தின் இறுதிநாளில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 980.93 அல்லது 1.61% புள்ளிகள் குறைந்து 59,845.29 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 320.55 அல்லது 1.77% புள்ளிகள் சரிந்து 17,806.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
டிவி லேப்ஸ் நிறுவனம் மட்டும் லாபத்தில் உள்ளது. அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், டாட்டா ஸ்டீஸ், கோல் இந்தியா, ஹீரோ மோட்டார்கிராப் லான்சர் காண்டைன், குட் லக், அபான்ஸ் ஹோல்டிங்க்ஸ், தேவ் இன்ஃபர்மேசன், ஐ.ஓ.பி. திருப்பதி ஃபார்ஜ், ராயல் ஆர்சிட், கல்யாண் ஜுவெல்லர்ஸ், பாரத் ரோட் நெட், ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தமாகின்றன.
கொரோனா தாக்கம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தையானது மந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாக்குவதைவிடுத்து லாபநோக்கம் கருதி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.