Share Market Opened : இன்று சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...சரிவில் டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி...
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி உள்ளது.
Share Market opened : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி உள்ளது.
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 186.74 புள்ளிகள் உயர்ந்து 62,491.17 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 51.95 புள்ளிகள் உயர்ந்து 18,608.35 புள்ளிகளாக உள்ளது.
Sensex declines 186.74 points to 62,491.17 in early trade; Nifty dips 51.95 points to 18,608.35
— Press Trust of India (@PTI_News) December 15, 2022
லாபம்-நஷ்டம்
டெக் மகேந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் டெக், ஹின்டல்கோ, யுபிஎல், ஐசிஐசிஐ வங்கி, டெட்டன் கம்பெணி, நெஸ்டீலே, கிராசிம், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், விப்ரோ, கோல் இந்தியா, ரிலையன்ஸ், ஐடிசி, சிப்ளா, லார்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
எஸ்பிஐ வங்கி, என்டிபிசி, எச்டிஎஃப்சி லைப், டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா, ஹிரோ மோட்டாகோர்ப், எச்டிஎஃப்சி வங்கி, சன்பார்மா, எம்எம், பிபிசிஎல், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அமெரிக்க பெட்ரல் வங்கி
அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த நேற்று வட்டி வகிதத்தை உயர்த்தி இருந்தது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நேற்றைய அறிவிப்பின்படி, அமெரிக்க பெட்ரல் வங்கியானது வட்டி விகிதத்தை 4.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்தாண்டு ஏழாவது முறையாக வட்டி விகிதத்தை பெட்ரல் வங்கி உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகித உயர்வானது 2007-ஆம் ஆண்டு பிறகு அதிகபட்சமாக வட்டி உயர்வு என்று கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று சரிவில் தொடங்கியுள்ளது.
மேலும், சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது.
ரூபாய் மதிப்பு:
Rupee declines 15 paise to 82.64 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) December 15, 2022
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 15 காசுகள் குறைந்து 82.64 ரூபாயாக ஆக உள்ளது.