(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Update: 300 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்; ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை!
Stock Market Update:
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 351.49அல்லது 0.53% புள்ளிகள் அதிகரித்து 66,707.20 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 97.70 அல்லது 0.50 % புள்ளிகள் உயர்ந்து 19,778.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
லார்சன், ஐ.டி.சி.,பிரிட்டானியா, ரிலையன்ஸ், சன் ஃபார்மா, ஆக்ஸிஸ் வங்கி, சிப்ளா, இன்ஃபோசிஸ், கோடாக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்., யு.பி.எல்.,பாரத ஸ்டேட் வங்கி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், பாரதி ஏர்டெல், டாடா கான்ஸ் ப்ராட்., ஜெ.எஸ்.டபுள்யு., டாடா ஸ்டீல், விப்ரோ, க்ரேசியம். அதானி போர்ட்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்தில் வர்த்தமான நிறுவனங்கள்
பஜார்ஜ் ஃபின்சர்வ, எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, டிவிஸ் லேப்ஸ், அதானி பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப் சி வங்கி, பவர் கிரிட் கார்ப், மாருதி சுசூகி,உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
கடந்த இரண்டு வாரங்களாக சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச்சந்தைகள் பாசிட்டிவாக நிறைவடைந்தது. வரலாற்றில் முதன் முறையாக சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்திருந்தது. அப்படியிருக்க, இன்று சென்செக்ஸ் 6 நாட்களுக்கு தொடர்ந்து உயர்ந்து வந்த சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிந்தது. சில நிறுவனங்களின் முதல் காலாண்டு லாபம் எதிர்பார்த்த அளவு இல்லை. உள்ளூர் நிறுவனங்கள் பங்குகளை விற்றன. சர்வதேச அளவிலும் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.
பல்வேறு நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்தது பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நிஃப்டை பொறுத்தவரையில் ஸ்மால்கேப் 100 நிறுவனங்கள் பெரிதாக பர்ஃபார்ம் செய்யவில்லை. அதோடு, அமெரிக்க பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகின.