மேலும் அறிய

தொற்று எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துவரும் தங்கத்தின் விலை.. நிபுணர்களின் கருத்து என்ன?

தங்கத்தில் விலையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது மக்களின் வாங்கும் சக்தியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஆடம்பரமானது என்று கருதப்படும் மனநிலை ஒருபுறம் இருந்தாலும், தங்கத்தை மக்கள் புனிதமாக கருதுகின்றனர். அதனால், அனைத்து சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தங்கம் பிரதானமாக உள்ளது. முக்கியமாக திருமண விழாக்களில் தங்கம் எவ்வளவு முக்கியத்துவம் பெரும் என்பது இந்திய குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும்.

சித்திரை, வைகாசி, ஆனி என தொடர்ந்து திருமண நிகழ்வுகள் நடைபெறும் காலம் இது. அத்துடன், தங்கத் திருவிழாவான அக்‌ஷய திருதியை மே மாதம் வரவிருக்கிறது. இந்த நாளில், தங்கம் வாங்கினால், அதிகம் தங்கம் சேரும் என்று தங்கம் வாங்குவோர் மத்தியில்  நம்பிக்கையாக உள்ளது. 

தொற்று எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துவரும் தங்கத்தின் விலை.. நிபுணர்களின் கருத்து என்ன?

இப்படி தொடர்ந்து, பல நிகழ்ச்சிகள், விழாக்கள் வரவுள்ளன. இந்நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தை கண்டுவருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விலை உயர்வால் அதிக கலக்கத்தில் உள்ளனர். விலை உயர்வுக்கு காரணம், மீண்டும் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதே என்று கூறப்படுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில், தங்கத்தின் விலை கடும் உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு, கடந்த மார்ச் வரை தொடர்ந்து சரிவை கண்ட நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தொற்று எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துவரும் தங்கத்தின் விலை.. நிபுணர்களின் கருத்து என்ன?

கடந்த மார்ச் 31-ஆம் தேதி சென்னையில் 24 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 4,550 ரூபாயாக இருந்தது. தற்போது அதே 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் 4,770 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சுமார் 220 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 4,375 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்தாண்டு இருந்ததை விட, தற்போது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து மேல் பதிவாகி வருகிறது. எனவே, கடந்தாண்டை போலவே, மீண்டும் பொருளாதாரம் முடங்கி விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

தொற்று எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துவரும் தங்கத்தின் விலை.. நிபுணர்களின் கருத்து என்ன?

பொருளாதாரம் சரியாக இல்லாத போதும், பூகோள அடிப்படையிலான பிரச்சனைகள் எழும்போது தங்கத்தின் விலை இயல்பாகவே அதிகரிக்கும். மேலும், கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.35 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. இவை எல்லாம் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கி மற்றும் சில நிதி நிறுவனங்கள் சர்வதேச தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 2,000 டாலரை உயரும் என கணித்திருந்தது. அது போலவே, தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இவர்கள் கணித்தது போலவே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என தெரிகிறது.

தொற்று எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துவரும் தங்கத்தின் விலை.. நிபுணர்களின் கருத்து என்ன?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் மூதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

தொற்று எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துவரும் தங்கத்தின் விலை.. நிபுணர்களின் கருத்து என்ன?

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும். ஏனென்றால்,  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே என்று கூறினார்.

கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார்.

தொற்று எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துவரும் தங்கத்தின் விலை.. நிபுணர்களின் கருத்து என்ன?

கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு, அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு, அவர்கள் முன்பு சேமித்து வைத்த தங்கமே உதவி புரிந்தது. அப்போது, அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்காமல் சிலர் இருப்பார்கள், கொரோனா அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்திவிடுவார்களோ என்ற அச்சமும் நடுத்தர குடும்பத்தாரிடம் உள்ளது. எந்தக்காலத்திலும் நமக்கு உதவியாக இருக்கும் என்று சிறிது, சிறிது தங்கத்தை சேமித்துவைத்த அவர்களுக்கு, இனி தங்கம் வாங்குவது எட்டாக்கனியாகவே இருக்கப்போகிறது. கொரோனா தொற்று முழுமையாக ஒழிந்தால்தான், தங்கத்தின் விலையும் குறையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget