Petrol,Diesel Price Today : இன்னும் இன்னும் உயர்கிறது பெட்ரோல் விலை..! தவிப்பில் மக்கள்..!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 101.92க்கு விற்கப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.67க்கு விற்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.39க்கு விற்கப்பட்டது. திங்கள்கிழமையான இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூபாய் 101.92க்கு விற்பனையாகிறது. டீசல் 15 காசுகள் குறைந்து 94.24 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட 38 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.