Stock Market Update: புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதிநாள் வர்த்தகத்தில் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 435.85 அல்லது 0.65 % புள்ளிகள் உயர்ந்து 67,430.66 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 125 அல்லது 0.62% உயர்ந்து 20,257.25 ஆக வர்த்தகமாகியது. நிஃப்டி பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிஃப்டி 20,222.45 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் நிஃப்டி 20,260.20 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார திட்டங்களுக்கான வரைவுகளின் பற்றிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் வணிக சிலிண்டருக்கான விலையை ரூ.21 உய்ர்த்தியுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. உணவகங்கள் உள்ளிட்ட வணிக எல்.பி.ஜி. பயன்படுத்துபவர்கள் டெல்லியில் ரூ.1775.50 ஆகவும் மும்பையில் ரூ.1749 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,908 ஆகவும் சென்னையில் ரூ.1968.50 ஆகவும் விறபனையாகிறது.
நேற்று ஐந்து நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. டாடா டெக்கின் மதிப்பு உயர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று Flair Writing நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
என்.டி.பி.சி., ஐ.டி.சி., லார்சன், கோல் இந்தியா, எஸ்.பி.ஐ.,இந்தஸ்லேண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், பவர்கிரிட் கார்ப், க்ரேசியம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பிரிட்டானியா, மாருதி சூசூகி,டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டர்கார்ப், ஓ.என்.ஜி.சி., அதானி எண்டர்பிரைசிஸ், ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ்ம் ஈச்சர் மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, யு.பி.எல், டி.சி.எஸ்., கோடாக் மஹிந்திரா, சன் பார்மா, பாரதி ஏர்டெல், டாடா கான்ஸ் ப்ராட், ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
பஜாஜ் ஆட்டோ, விர்போ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, சிப்ளா, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டர்ஸ், அல்ட்ராடெக் கம்பெனி, நெஸ்லே, எம் அண்ட் எம். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
மேலும் வாசிக்க..
India G20 Leadership: முடிந்தது ஜி20 தலைமை பொறுப்பு பதவிக்காலம் - ஓராண்டில் இந்தியா சாதித்தது என்ன?