MIB Order : ஜீ மீடியா வழக்கில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் உத்தரவு.. சிறு ஊடகங்களுக்கான சமவாய்ப்பு..!
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் உத்தரவால், இனி சமவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை உத்தரவு
சிறு ஒளிபரப்பு ஊடகங்கள், குறிப்பாக, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் ஊடகங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் உத்தரவால், இனி சமவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.
டிஷ் டிவி டெலிபோர்ட்டின் வழியாக, ஜி-சாட் 15-இன் கு-பேண்டில், 10 புதிய தொலைக்காட்சி சேனல்களை இணைப்பதற்கு ஜீ மீடியாவுக்கு அளித்த அனுமதியை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது.
டிடி ஃப்ரீ டிஷ், பிரசார் பாரதி ஆகியவற்றில் கட்டணமில்லாமல் ஒளிபரப்புவது, இந்த உத்தரவின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
அக்டோபர் 2019
அக்டோபர் 2019-ஆம் ஆண்டில், டிஷ் டிவி டெலிபோர்ட்டின் வழியாக, ஜி-சாட் 15-இன் கு-பேண்டில்,10 சேனல்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சகம் அனுமதியளித்திருந்தது. ஜீ ஹிந்துஸ்தான், ஜீ ராஜஸ்தான், ஜீ பஞ்சாப் ஹரியானா ஹிமாச்சல், ஜீ பிஹார் ஜார்க்கண்ட், ஜீ மத்தியபிரதேசம்- சத்தீஸ்கர், ஜீ உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஜீ சலாம், ஜீ 24 கலக், ஜீ 24 டாஸ் மற்றும் ஜீ ஒடிஷா (தற்போதைய ஜீ டெல்லி என்.சி.ஆர் ஹரியானா) ஆகியவை இதில் அடக்கம்.
இதன் பிறகாகத்தான், டிடி ஃப்ரீ டிஷ் மற்றும் டிஷ் டிவியின் ட்ரான்ஸ்போண்டர்கள் ஒரே சாட்டிலைட்டில் அமைந்திருப்பது தெரியவந்தது. இதனால் கட்டணங்கள் ஏதுமின்றி டிடி ஃப்ரீ டிஷ்ஷிலும் இவை ஒளிபரப்பாகிவந்தன
ட்ராய்
மற்ற ஊடகங்களால், ட்ராயிடமும், ரேட்டிங் முகமையான BARC-க்கும் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது ஜீ மீடியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. நாட்டின் மொத்த தொலைக்காட்சிப் பெட்டிகளில் கால்வாசிக்கும் மேலான 40 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றது டிடி ஃப்ரீ டிஷ்.இப்படி டிடி ஃப்ரீ டிஷ் மூலம் கிடைக்கும் ஒளிபரப்பு எந்த தொலைக்காட்சிக்கும் பெரிய வரப்பிரசாதமே.
அரசு ஒளிபரப்புத்துறை, சேனல்களை இந்த டிடிஹெச் சர்வீஸுடன் இணைப்பது மூலம் குறிப்பிடத்தக்க வருமானம் கிடைத்துவந்தது. கடந்த ஏலத்தில் ஹிந்தி சேனலுக்கு ரூ.8.95 கோடியும், மற்ற மொழி சேனல்களுக்கு ரூ.6.20 கோடி பெறப்பட்டன.
பிற தொலைக்காட்சி நிறுவனங்கள் வைத்த புகார் தெரிவித்தது என்னவெனில், நாடு முழுவதும் ஒளிபரப்பும் ஊடகங்களைக் கொண்டிருக்கும் ஜீ மீடியா, ஒரே ஒரு ஸ்லாட்டுக்கு மட்டும் கட்டணம் செலுத்திவிட்டு, ஃப்ரீ டிஷ் தளத்தில் ஜீ நியூஸ் ஒளிபரப்பட்டது என்பதைத்தான்.
இறுதியாக பல்வேறு முறையீட்டுக்குப் பின், செப்டம்பர் 23-ஆம் தேதி, ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது. இதை மக்களுக்கான சிறு ஊடகங்கள், பெரிய வெற்றியாக கருதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜீ மீடியா சேனல்களின் நேயர்களின் சதவிகிதம், கட்டணம் செலுத்தாமல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஃப்ரீ டிஷ்ஷின் மூலம் 50 - 60 %-ஆக இருந்தது. ஆனால் இனி நமக்கு சமவாய்ப்பு இருக்கும். நமது சந்தை வாய்ப்பும் அதிகரிக்கும்” என மத்திய பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சேனலின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது