Cryptocurrency: எங்கும் பேசப்படும் கிரிப்டோகரன்சி.. IMF கீதா கோபிநாத் சொல்வது என்ன?
எந்தவொரு தனி நாடும் இந்த சிக்கலைத் தாங்களாகவே தீர்க்க முடியாது. ஏனெனில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை எல்லை தாண்டிச் செய்ய முடியும். அதற்கு அவசரமாக உலகளாவிய கொள்கை தேவை - கீதா கோபிநாத்
வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் கிரிப்டோகரன்சியை தடை செய்வதற்குப் பதிலாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் (என்சிஏஇஆர்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய கீதா கோபிநாத், "பல பரிமாற்றங்கள் வெளியே இருப்பதால், அவை ஒரு குறிப்பிட்ட நாட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல. எனவே நீங்கள் உண்மையிலேயே கிரிப்டோவை தடை செய்வதில் சவால்கள் உள்ளன.
உலகளாவிய கொள்கை குறித்து பேசிய கீதா கோபிநாத், "எந்தவொரு தனி நாடும் இந்த சிக்கலைத் தாங்களாகவே தீர்க்க முடியாது. ஏனெனில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை எல்லை தாண்டிச் செய்ய முடியும். அதற்கு அவசரமாக உலகளாவிய கொள்கை தேவை," என்றார். மேலும் அவர், CNBC TV-18க்கு அளித்த பேட்டியில், கிரிப்டோகரன்சி என்பது "உலகளாவிய அச்சுறுத்தல் அல்ல என்று கூறினார்.
தொடர்ந்து அதிகரித்துவரும் ஒமிக்ரான் குறித்து பேசிய அவர், "அதிக அளவில் நோய்த் தொற்று பரவுவது கவலை அளிக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக, சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) ஆராய்ச்சி துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட உதவும், உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடுகிறது. இந்த நிதியத்தின் தலைவராக கடந்த 2018ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.
இப்பதவியிலிருந்து விலக உள்ள கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் முதல் நிர்வாக உதவி இயக்குனராக (First Managing Deputy Director) 2022ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி முதல் தனது பணியைத் தொடங்கவிருக்கும் சூழலில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vikram Covid Positive | நடிகர் விக்ரமுக்கு உறுதியானது கொரோனா தொற்று..
குடும்பம்.. அவமானம்.. சமந்தாவை மறைமுகமாக தாக்குகிறாரா நாக சைதன்யா..??
யூடியூபர் மாரிதாஸுக்கு, 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு