Vikram Covid Positive | நடிகர் விக்ரமுக்கு உறுதியானது கொரோனா தொற்று..
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியே இருப்பதால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.
நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது விக்ரமுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுபெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மகான்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக இரண்டு முக்கிய படங்கள் கிடப்பிலேயே கிடக்கின்றன. விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் படம் பல வருடங்கள் முன்பு ஆரம்பிக்கப்பட்டது. கௌதம் இயக்கம் என்பதால் படம் இன்னும் பல வருடங்கள்கூட தாமதமாகலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தை டிமான்டிக் காலணி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து எடுத்து வருகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இந்தப் படமும் பல வருடங்களாக கிடப்பிலேயே கிடக்கிறது. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் வருகிறார்.
சில காட்சிகளை படமாக்க இயக்குநர் திட்டமிட்டதைவிட அதிக நாள்களை எடுத்துக் கொள்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் எகிறுவது தயாரிப்பாளரை கவலைப்படுத்தியுள்ளது. படத்தின் தாமதத்திற்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இப்போது தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளனர். இயக்குனர் சொல்லும் பட்ஜெட்டைவிட அதிகம் செலவானால், அதனை இயக்குனர் தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இயக்குனர் ஒப்புக் கொண்டதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்தியன், விக்ரம் என படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார் கமல். அவரைத் தொடர்ந்து பிரபல நடிகர் அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு அதிகமடைவதால் அச்சம் நிலவுகிறது.