சென்னையில் தங்கம், வெள்ளி உயர்வு
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.312 அதிகரித்து, ரூ.34 ஆயிரத்து 376க்கு விற்கப்பட்டது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 297க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.39 உயர்ந்து சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 258க்கு விற்கப்படுகிறது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.34 ஆயிரத்து 064க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.312 அதிகரித்து ரூ.34 ஆயிரத்து 376க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் தொடர்ந்து ரூ.34 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைப் போன்றே வெள்ளியின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.69.30க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.70.50க்கு விற்கப்படுகிறது. இதேபோல, ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.69 ஆயிரத்து 300க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று கிலோவிற்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.70 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.