Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
தங்கத்தின் விலை பெரும்பாலும் மக்களுக்கு அதிர்ச்சியையே கொடுக்கும். ஆனால் இன்று சற்று மாறுதலாக மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆம், சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய விலையை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை சமீப காலங்களில் தாறுமாறாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. ஒரு மாறுதலுக்காக சில சமயங்களில் கணிசமாக விலை குறைந்து. அப்படி ஒரு நாள் தான் இன்று. தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்துள்ளது. தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.
கூடுவதும் குறைவதுமாய் ஆட்டம் காட்டும் தங்கம்
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலத்தில் கூடுவதும் குறைவதுமாய் பொதுமக்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த வாரத்தின் கடைசியில், தங்கம் விலை சவரனுக்கு 90,400-ஆக இருந்தது. ஆனால், இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது நவம்பர் 10-ம் தேதி முதல் விலை ஏறத் தொடங்கியது.
அதன்படி, 10-ம் தேதி ஒரு கிராம் 11,480 ரூபாயாகவும், ஒரு சவரன் 91,840 ரூபாயாகவும் இருந்தது. 11-ம் தேதியும் கணிசமாக விலை கூடிய தங்கம், ஒரு கிராம் 11,700 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,600 ரூபாய்க்கும் சென்றது.
தொடர்ந்து, 12-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 11,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 13-ம் தேதியான நேற்று அதிரடி விலை உயர்வை கண்டது.
அதன்படி, ஒரு கிராமிற்கு 300 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 11,900 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, சவரன் 95,200 ரூபாய்க்கும் எகிறியது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
அதன்படி, இன்று காலையில், தங்கம் ஒரு கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து, கிராம் 11,840 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 94,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், மாலையில் மீண்டும் சவரனுக்கு 800 ரூபாய் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து, கிராம் 11,740 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைவு
இதேபோல், வெள்ளி விலையும் கிராமிற்கு 3 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில் 165 ரூபாயாக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை, 10-ம் தேதி 4 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 169 ரூபாயாக விற்பனையானது.
தொடர்ந்து, 11-ம் தேதி ஒரு ரூபாய் விலை உயர்ந்து கிராம் 170 ரூபாய்க்கு சென்றது. 12-ம் தேதியும் 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 173 ரூபாயாக விற்கப்பட்டது.
இந்நிலையில், 13-ம் தேதியான நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு அதிரடியாக 10 ரூபாய் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 3 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 180 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.





















