Gold Rate New Peak: அதிரடி காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்து 83000-த்தை தாண்டியது - விலை எவ்வளவு.?
புதிய உச்ச விலைகளை தொட்டு அதிரடி காட்டிவரும் தங்கம், இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, ஒரு சவரன் 83,000 ரூபாயை கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர் உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, ஒரு சவரன் 83,000 ரூபாயை கடந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 1,120 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.
தொடர் உயர்வை சந்தித்துவரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அன்றாடம் மாற்றியமைக்கப்படும் நிலையில், பெரும்பாலும் விலை உயர்வையே சந்தித்து வருகிறது.
கடந்த 15-ம் தேதி கிராம் 10,210 ரூபாயாகவும், சவரன் 81,680 ரூபாயாகவும் இருந்த நிலையில், 16-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 82,240 ரூபாய்க்கும் விற்பனையானது.
17-ம் தேதி சற்று விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 10,270 ரூபாய்க்கும், ஒரு சவரன் 82,160 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, 18-ம் தேதி சற்றே விலை குறைந்து, ஒரு கிராம் 10,220 ரூபாயாகவும், ஒரு சவரன் 81,760 ரூபாயாகவும் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து 19-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,230 ரூபாய்க்கும், ஒரு சவரன் 81,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 20-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,290 ரூபாயாகவும், ஒரு சவரன் 82,320 ரூபாயாகவும் விற்பனையானது.
இதையடுத்து, 21-ம் தேதியான நேற்று அதே விலையில் நீடித்த நிலையில், இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் என்ன.?
இன்று காலை சவரனுக்கு 560 ரூபாய் விலை உயர்வை கண்டது தங்கம். அதன்படி, ஒரு கிராம் 10,360 ரூபாய்க்கும், ஒரு சவரன் 82,880 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், மதியத்தில் மீண்டும் சவரனுக்கு 560 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,430 ரூபாயாகவும், ஒரு சவரன் 83,440 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று ரூ.3 உயர்வு
இதனிடையே, வெள்ளி விலையும் இன்று கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 15-ம் கிராம் 143 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 16-ம் தேதி ஒரு ரூபாய் உயர்ந்து 144-ஆக விற்பனையானது.
தொடர்ந்து, 17-ம் தேதி 2 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 142 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 18-ம் தேதி மீண்டும் ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 141 ரூபாய்க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்த, 19-ம் தேதி 2 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 143 ரூபாயாக விற்கப்பட்டது. 20-ம் தேதி மீண்டும் 2 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 145 ரூபாயானது.
பின்னர், 21-ம் தேதியான நேற்று அதே விலையில் நீடித்த நிலையில், இன்று கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 148 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் பிற்பகலில் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்ததாலேயே, இங்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விலை உயர்வு, மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.





















