Financial Deadlines: அலர்ட்! இன்னும் 7 நாள் தான் இருக்கு..செப்டம்பர் 30க்குள் இதையெல்லாம் மறக்காமா பண்ணுங்க..
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Financial Deadlines: அலர்ட்! இன்னும் 7 நாள் தான் இருக்கு..செப்டம்பர் 30க்குள் இதையெல்லாம் மறக்காமா பண்ணுங்க.. Financial deadlines septemer month postal aadhar pan linking 2000 rupees note Financial Deadlines: அலர்ட்! இன்னும் 7 நாள் தான் இருக்கு..செப்டம்பர் 30க்குள் இதையெல்லாம் மறக்காமா பண்ணுங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/23/d669ddc857e00178bdda01a49d7b7eca1695451016624572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான கெடு செப்டம்பரில் முடிவடைகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார்-பான் இணைப்பு வரை இதில் அடங்கும். இதில் பல கெடுக்கள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டவை இப்போது இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள்:
புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபர்கள், செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாக, வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்-பான் இணைப்பு:
அஞ்சலகக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறு சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள மக்கள் தங்களது தபால் அலுவலக கணக்குடன் இணைக்கத் தவறினால், தபால் அலுவலக கணக்கு செயலிழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் முதலீடு செய்ய முடியாது. முதலீட்டின் முதிர்வு பலன்களை பெற வாய்ப்பு இருக்காது மேலும், கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்த மஹோத்சவ் எஃப்டி:
ஐடிபிஐ வங்கி தனது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடிபிஐயின் பிக்சட் டெபாசிட் திட்டம் 375 நாட்கள் FD திட்டமாகும். இந்த திட்டத்தின் செல்லுபடி காலத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தில் 7.10 முதல் 7.65 சதவீதம் வட்டி தரப்பட்டது. சாதாரண குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் இத்திட்டத்தில் உள்ளது.
எஸ்பிஐ சிறப்பு எஃப்டி:
பாரத் ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்ய செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஆதார் சமர்ப்பிப்பு:
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)