பொதுமக்களே உஷார்! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது... எத்தனை சதவீதம் தெரியுமா..?
நெஸ்ட்லே நிறுவனத்தை தொடர்ந்து மற்றொரு அத்தியாவசிய பொருட்களான டாபர், பார்லி நிறுவனங்களும் விலையை உயர்த்த இருக்கின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோதுமை இறக்குமதி, சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து, உணவு பொருட்களை பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பேக்கிங் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முன்னணி நிறுவனங்களில் விலையேற்றம் :
நெஸ்ட்லே நிறுவனம் கடந்த வாரம் தங்கள் நிறுவனத்தின் விலையை 15 சதவீதம் வரை உயர்த்தியது. அதனைதொடர்ந்து இந்துஸ்தான் யுனிலீவர் லிமிட் நிறுவனமும் அதே சதவீத விலையை தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் மீது உயர்த்தியது. இந்தநிலையில், மற்றொரு அத்தியாவசிய பொருட்களான டாபர், பார்லி நிறுவனங்களும் விலையை உயர்த்த இருக்கின்றனர்.
இதுகுறித்து, பார்லி நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு மூத்த அதிகாரி மயங்க் ஷா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், “தொடர்ந்து இத்தகைய சூழலைக் கவனித்து வருகிறோம். தொடர்ச்சியாக பணவீக்கம் அதிகரித்து வருவதால் எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால், பிற நிறுவனங்களை போல நாங்களும் 10 முதல் 15 சதவீதம் வரை விலை உயர்த்த இருக்கிறோம். விலைவாசி தொடர்ந்து மாறி வருவதால், இந்த அளவுகாவது விலைவாசியை உயர்த்துவோம் என்றார்.
மேலும், பாமாயில் விலை லிட்டர் ரூ.180 ஆக உயர்ந்து தற்போது ரூ.150ஆகக் குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தநிலையில் 100 டாலராக சரிந்துள்ளது. முன்பு இருந்த விலையைவிட இப்பொழுது எவ்வளவு உயரும் என்று தெரியவில்லை. உள்ளீட்டுச் செலவு அதிகரித்துவிட்டதால் நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலையில்தான் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, டாபர் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரி அன்குஷ் ஜெயின் இதுகுறித்து தெரிவிக்கையில், “ பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பால் பொருட்கள் விலை அதிகரி்த்து வருவதால் நுகர்வோர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். சந்தைச் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், பணவீக்கத்துக்கு ஏற்றார்போல் விலையை உயர்த்துவோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்