அச்சச்சோ...! இனி கிரெடிட் கார்டு பில்லை இப்படியெல்லாம் கட்ட முடியாது: ஆர்.பி.ஐ அதிரடி திட்டம்
புதிய ஒழுங்குமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பில்லிங் நெட்வொர்க் வழியாக மட்டுமே கிரிடிட் கார்டு பில் கட்ட முடியும்.
கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி சில ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பில்லிங் நெட்வொர்க் வழியாக மட்டுமே கிரெடிட் கார்டு பில் கட்ட முடியும்.
கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு புதிய நடைமுறைகள்: நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களான PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues ஆகியவை ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஒழுங்குமுறையால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள், 50 கோடிக்கும் மேலான கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்துள்ளது. இருந்தபோதிலும், பாரத் பில் கட்டண முறை (BBPS) விதிகளை இந்த வங்கிகள் இன்னும் பின்பற்றவில்லை.
BBPS விதிகளை பின்பற்றாத காரணத்தால் ஜூன் 30க்குப் பிறகு மேல்குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள், கிரெட் மற்றும் ஃபோன்பே போன்ற ஃபின்டெக் தளங்கள் மூலம் தங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த முடியாது.
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு: வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள், அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலம் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தின் கீழ் PhonePe மற்றும் Cred போன்ற ஃபின்டெக் நிறுவனங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுவிட்டன. இருப்பினும், புதிய ஒழுங்குமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இந்த வங்கிகளால் கிரெடிட் கார்டு கட்டணத்தை செயல்படுத்த முடியாது.
நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு, ஜூன் 30ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு, அங்கீகரிக்கப்பட்ட 34 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளில் எட்டு வங்கிகள் மட்டுமே பாரத் பில் கட்டண முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.
ஃபெடரல் வங்கி, கோடக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ கார்டு மற்றும் BoB கார்டு மட்டுமே இந்த கட்டண முறையை பின்பற்றி வருகிறது. மோசடியான பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவும் அதை தடுத்து நிறுத்தவும் கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை தங்கள் கட்டுப்பாட்டுகள் RBI கொண்டு வர உள்ளது.
இதையும் படிக்க: Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!