மேலும் அறிய

Freshworks IPO: அமெரிக்காவில் ஐபிஓ வெளியிடும் சென்னை நிறுவனம்

பிரஷ்வொர்க்ஸ் SaaS எனும் பிரிவில் செயல்பட்டுவருகிறது. இதுபோல பல சாஸ் நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. `சாஸ் பூமி’ என்னும் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் நடத்தப்பட்டுவருகிறது.

சென்னையை சேர்ந்த பிரஷ்வொர்க்ஸ் நிறுவனம் அமெரிக்கா பங்குச்சந்தையில் ஐபிஒ வெளியிட விண்ணப்பித்திருக்கிறது. திருச்சியை சேர்ந்த கிரீஷ் மாத்ரூபூதம் மற்றும் அவரது நண்பர்கள் ஷான் கிருஷ்ணசாமி ஆகிய நண்பர்கள் இணைந்து தொடங்கி நிறுவனம் இது.

படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்து மீண்டும் இந்தியாவில் வந்து தொழில் தொடங்கும் முடிவில் சென்னை வந்திருக்கிறார். ஆனால் 2001-ம் ஆண்டு காலகட்டத்தில் டாட் காம் பிரச்சினை எழவே சூழ்நிலை சரியில்லாததால் மீண்டும் வேலைக்கு சென்றார். தற்போது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ஜோஹோ 2001-ம் ஆண்டு தொடக்க காலத்தில் இருந்தது. அந்த நிறுவனத்தில் 352 பணியாளராக இணைந்தார். நிறுவனம் வளரும் போது இவரது வளர்ச்சியும் நன்றாக இருந்தது. இந்த நிறுவனத்திலும் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் வீடு கார் என நல்ல நிலைமையில் இருந்தாலும் தொழில் தொடங்க வேண்டும் திட்டமிட்டார். வீட்டுகடன் இருந்தாலும் நண்பர்கள் உதவியுடன் பிரெஷ் டெஸ்க் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.

பின்னாட்களில் இந்த நிறுவனம் பிரஷ் வொர்க்ஸ் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு பிரஷ்டெஸ்க் தொடங்கப்பட்டது. 9 மாதங்களில் வென்ச்சர் கேபிடல் நிதி கிடைத்தது. முதல் வாடிக்கையாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் கிடைத்தது. தற்போது சர்வதேச அளவில் 52,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

செக்யோயா கேபிடல், டைகர் குளோபல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. தவிர கூகுள் கேபிடல் இந்தியாவில் செய்த முதல் முதலீடும் பிரஷ் வொர்க்ஸில்தான். 2019-ம் ஆண்டு நிதி திரட்டியது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.5 பில்லியன் டாலர்கள். ஐபிஓவுக்கு பிறகு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் இருக்கும் என கணிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் 4000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் 13 நிறுவனங்களை பிரஷ்வொர்க்ஸ் வாங்கி இருக்கிறது.

Freshworks IPO: அமெரிக்காவில் ஐபிஓ வெளியிடும் சென்னை நிறுவனம்

2019-ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்த கிரிஷ் அதன் பிறகு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். சர்வதேச அளவில் 125க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளன. ஆனால் மொத்த வருமானத்தில் 40 சதவீதத்துக்கு மேல் அமெரிக்காவில் இருந்து வருவதால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். டெக்னாலஜி நிறுவனங்களின் பெரும்பான்மையான 80 சதவீத வருமானம் அமெரிக்காவில் இருந்துதான் கிடைக்கும். எங்களுக்கு குறைவாக இருப்பதால் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டேன் என கிரிஷ் தெரிவித்திருக்கிறார்.

கிரிஷ் முதலீடுகள்

பிரஷ் வொர்க்ஸ் நிறுவனத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதுப்போல கிரிஷும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். இங்க்மாங்க், சார்ஜ்பீ, பிக்யுவர் டிரெயில் உள்ளிட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். தவிர பிர்ஷ்வொர்க்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களும் 16 நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிரஷ்வொர்க்ஸ் SaaS எனும் பிரிவில் செயல்பட்டுவருகிறது. இதுபோல பல சாஸ் நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. `சாஸ் பூமி’ என்னும் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் நடத்தப்பட்டுவருகிறது. இதில் நிறுவனர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். சாஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதிலும் கிரிஷ் முக்கிய பங்கு வகிக்கிறார்.

2021-ம் ஆண்டின் முக்கிய ஐபிஓவாக பிரஷ் வொர்க்ஸ் இருக்ககூடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Embed widget