ATM Operations Change : ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும் முறையில் மாற்றம்...தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஏடிஎம்மிலிருந்து பணத்தை எடுக்கும் முறையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மாற்றம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஏடிஎம்மிலிருந்து பணத்தை எடுக்கும் முறையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மாற்றம் செய்துள்ளது. ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையில் பணத்தை திரும்பப் பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் பல வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இந்த முறைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராக இந்த புதிய முறை கூடுதல் பாதுகாப்பு தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் எடுக்கும் போது, வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் OTPஐ உள்ளிட வேண்டும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
OTP என்பது கணினியால் உருவாக்கப்பட்ட நான்கு இலக்க எண்ணாகும். இது வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதை வைத்து ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். OTPஐ ஏடிஎம்-இல் பதிவிட்ட பிறகே பணத்தை எடுக்க முடியும்.
கடந்த ஜனவரி 1, 2020ஆம் ஆண்டு, நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, OTP அடிப்படையில் பணத்தை திரும்பப் பெறும் சேவையைத் தொடங்கியது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் ஏடிஎம் மோசடிகள் பற்றி எஸ்பிஐ விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டு கொண்டுள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒரு பரிவர்த்தனையின் மூலம் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனையை முடிக்க OTP தேவைப்படும்.
OTP-ஐ பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?
- எஸ்பிஐ ஏடிஎம்-இல் பணத்தை எடுக்கும்போது உங்கள் டெபிட் கார்டு மற்றும் மொபைல் ஃபோன் உங்களிடம் இருக்க வேண்டும்.
- உங்கள் டெபிட் கார்டைச் ஏடிஎல் இயந்திரத்தில் செலுத்தியதும், பணம் எடுக்கும் தொகையுடன் ATM PINஐ
- உள்ளிடு செய்து பிறகு, உங்களிடம் OTP கேட்கப்படும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் OTP வரும்.
- ஏடிஎம் திரையில் உங்கள் போனில் பெறப்பட்ட OTPயை உள்ளிட வேண்டும்.
- நீங்கள் செல்லுபடியாகும் OTP ஐ உள்ளிட்டதும் பணத்தை எடுக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்