2024-25 நிதியாண்டில் சாதனை படைத்த அதானி குழுமம்.. உச்சம் தொட்ட மொத்த வருவாய்
இதுவரை இல்லாத அளவுக்கு 90,000 கோடி ரூபாயை மொத்த வருவாயாக (EBITDA) ஈட்டி சாதனை படைத்துள்ளது அதானி குழுமம். 2024-25 ஆம் ஆண்டில் அதன் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.40,565 கோடியாக உயர்ந்தது.

2024-25 நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு 90,000 கோடி ரூபாயை மொத்த வருவாயாக (EBITDA) ஈட்டி சாதனை படைத்துள்ளது அதானி குழுமம். 126,000 கோடி (USD 14.7 billion) ரூபாயை முதலீடு செய்து, மூலதனச் செலவினத்திலும் சாதனை படைத்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் அதன் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.40,565 கோடியாக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக, 16.5 சதவீதத்தை சொத்துகள் மீதான வருமானமாக பெற்றுள்ளது. இது, உள்கட்டமைப்புத் துறையில் உலகளவில் மிக உயர்ந்த வருவாயாகும்.
இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "விவேகமான மூலதன ஒதுக்கீடு, சொத்து மீதான வருமானம் (ROA) 16 சதவீதமாக நிலையானதாக இருக்க வழிவகுத்தது. அதிக வளர்ச்சியை அடைய Return on Assetஇல் எந்த சமரசமும் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது.
Adani Enterprises:
ANIL சூரிய மின்சக்தி Module விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 59 சதவீதம் அதிகரித்து 4263 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 6 GW கூடுதல் திறனுக்கான டாப்கான் module மற்றும் செல் வரிசையின் விரிவாக்கம் தொடங்கியுள்ளது.
அதானி விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீதம் அதிகரித்து 94.4 மில்லியனாகவும், சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் அதிகரித்து 1.09 மில்லியன் டன்னாகவும் உள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு 2,410.1 லேன்-கி.மீ. சாலை வணிகத்தில் கட்டப்பட்டுள்ளன. கட்டுமானத்தில் உள்ள 8 திட்டங்களில் 7 திட்டங்கள் இப்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முந்த்ராவில் 500 KTPA (ஆண்டுக்கு கிலோ டன்) செம்பு உருக்காலை இப்போது செயல்பாட்டில் உள்ளது. மேலும் வரும் மாதங்களில் முழுமையாக மேம்படுத்தப்படும்.
Adani Green Energy:
2,710 மெகாவாட் சூரிய மின்சக்தி மற்றும் 599 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் செயல்பாட்டு திறன் 30 சதவீதம் அதிகரித்து 14,243 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
Adani Energy Solutions:
டிரான்ஸ்மிஷன் ஆர்டர் புக், ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.17,000 கோடியிலிருந்து (USD 2 பில்லியன்) 3.5 மடங்கு அதிகரித்து ரூ.59,936 கோடியாக (USD 7 பில்லியன்) உயர்ந்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் கட்டம் III பகுதி-I (பத்லா - ஃபதேபூர் HVDC டிரான்ஸ்மிஷன் லைன்) உட்பட ஏழு புதிய டிரான்ஸ்மிஷன் திட்டங்களை வென்றது. இது இன்றுவரை AESL இன் மிகப்பெரிய ஆர்டர் வெற்றியாகும்.
Adani Power:
102 பில்லியன் யூனிட்டுகளாக மின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. செயல்பாட்டு திறன் இப்போது 17.5 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால் அதானியின் மொத்த பயன்பாட்டு 30 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
Ambuja Ltd:
ACL இப்போது 100 MTPA திறனைத் தாண்டியுள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 21 MTPA அதிகரிப்பு ஆகும்.





















