Ola Ride Update: ஓலா ட்ரைவர் ஏன் இப்படி பண்றாங்க? வாடிக்கையாளர் கேள்விக்கு ஓடி வந்து விளக்கமளித்த ஓனர்
ஓலா தனியார் நிறுவன வாடகை சேவையில் கிடைத்த விரக்தியால் இதை எழுதுகிறான் - ஓலா பயனர்
ஓலா வாடகை கார்களில் பயணத்தை ஒத்துக் கொண்ட ஓட்டுனர்கள் பிறகு ஏன் அதனை ரத்து செய்கிறார்கள் என்ற கேள்விக்கு அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் பதிலளித்துள்ளார்.
Today I am writing because I am very frustrated from OLA seevice, I booked a ride from my office to home I choose ola mini for comfort ride, but drivers called me and asked for destination and they cancelled ride it was happened 4 times,@bhash@Olacabs pic.twitter.com/sjh6jGEe6F
— Kishan Singh (@anikorari) December 20, 2021
முன்னதாக,கிஷான் சிங் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஓலா தனியார் நிறுவன வாடகை சேவையில் கிடைத்த விரக்தியால் இதை எழுதுகிறான். எனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ஓலா காரை காரை புக் செய்தேன். பயணம் திருப்திகரமான முறையில் இருக்க ஓலா மினி- ஐ தேர்வு செய்திருந்தேன். ஆனால், ஓட்டுனர்கள் என்னைத் தொடர்பு கொண்டு செல்லும் இடம் குறித்து கேட்கின்றனர். இடத்தைத் தெரிவத்தவுடன் பயணத்தை ரத்து விடுகின்றனர். நான்கு, முறை இதுபோல் நடந்தது" என்று பதிவிட்டார். மேலும், இந்த ட்விட்டர் பதிவை ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வாலுக்கும் டேக் செய்திருந்தார்.
Addressing the 2nd most popular question I get - Why does my driver cancel my Ola ride?!!
— Bhavish Aggarwal (@bhash) December 21, 2021
We're taking steps to fix this industry wide issue. Ola drivers will now see approx drop location & payment mode before accepting a ride. Enabling drivers is key to reducing cancelations. pic.twitter.com/MFaK1q0On8
இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பவிஷ் அகர்வால், " எனது ஓட்டுநர் ஏன் ஓலா பயணத்தை ரத்து செய்தார்?!! என்ற இரண்டாவது பிரபலமான கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக,
ஓலா ஓட்டுனர்கள் இனி பயணத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் டிராப் லோக்கேஷன் மற்றும் பரிவர்த்தனை செலுத்தும் முறையைப் பார்க்க முடியும். எனவே, இனி ரத்து செய்யும் போக்கு வெகுவாக குறையும். துறைசார்ந்த இந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று பதிவிட்டார்.
My @Olacabs driver told me that they’ve started seeing approximate destinations before accepting a booking! This is fabulous @bhash! Building for India 💪🏻 https://t.co/83uyQwTwSE
— Vineeta Singh (@vineetasng) December 21, 2021
ட்ராப் லொகேஷன், பணப் பரிவர்த்தனை பற்றிய முழுமையான தகவல் ஆகியவை தற்போது ஓட்டுனர்களுக்கு தெரியுமாறு அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் ஓலா ஓட்டுனர்கள் பயணத்தை ரத்து செய்யும் போக்கு குறையும் என்று நம்பப்படுகிறது. அவ்வப்போது, ஓட்டுனர் பயணத்தை ரத்து செய்தால், எந்தவித சேவையும் அனுபவிக்காத பயனர்கள் கூடுதலாக அபாரதத் தொகை செலுத்த வேண்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாறிவரும், இந்திய டிஜிட்டல் பொருளாதார சூழலில், குறுகிய கால ஒப்பந்த மற்றும் ப்ரீலேன்சிங் வேலைவாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு கிக் பொருளாதார (Gig Economy) செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. ஓலா, ஸ்விகி, சோமொட்டோ, உபர், ரேபிட்டோ, அமேசான் போன்ற சேவை வலை நிறுவனங்கள் இதில் கோலோச்சி வருகின்றன.