Updated Tata Punch: அடடா..! அப்டேடட் பஞ்ச் எஸ்யுவி அறிமுகம் - கூடுதல் டிரிம்கள், புதிய வசதிகள் & வேரியண்ட்கள்
Updated Tata Punch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மேம்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Updated Tata Punch: மேம்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் காரில், கூடுதல் டிரிம்கள் மற்றும் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அப்டேடட் பஞ்ச் எஸ்யுவி அறிமுகம்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பஞ்ச் எஸ்யூவியை புதுப்பித்து, அதன் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளுக்கான வரிசையை விரிவுபடுத்தி உள்ளது. அதோடு ரேஞ்சை ஓரளவு எளிதாக்கியுள்ளது. குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு நிறுவனம் கூடுதல் அம்சங்களையும் சேர்த்துள்ளது. டாடா பஞ்சின் அடிப்படை விலை ரூ. 6.13 லட்சத்தில் மாறாமல் உள்ளது, டாப்-ஸ்பெக் டிரிம் விலை ரூ.10.20 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.20,000 குறைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு எஸ்யூவியில் ரூ.18,000 வரை கூடுதல் சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அப்டேடட் பஞ்ச் வேரியண்ட் விவரங்கள்:
டாடா பஞ்ச் இனி ப்யூர் ரிதம், அகாம்ப்லிஷ்ட், அகாம்ப்லிஷ்ட் எஸ்ஆர் மற்றும் கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் டிரிம்களில் கிடைக்காது. எண்ட்ரி லெவல் வேரியண்ட்களான ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர் ரிதம் மாறாமல் தொடர்ந்தாலும், புதிய ப்யூர் (ஓ), அட்வென்ச்சர் எஸ் மற்றும் அட்வென்ச்சர் + எஸ் டிரிம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, அகாம்ப்லிஷ்ட் டாசில் மற்றும் கிரியேட்டிவ் வேரியண்ட்கள் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
சிஎன்ஜியால் இயங்கும் பஞ்ச் வகைகளின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து ஏழாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் எடிஷன்களைப் போலவே, எண்ட்ரி லெவல் ப்யூர், அட்வென்சர் மற்றும் அட்வென்சர் ரிதம் தொடர்கிறது. இருப்பினும், தேர்வு செய்ய அதிக எண்ணிக்கையிலான மிட்-ஸ்பெக் மற்றும் டாப்-ஸ்பெக் வகைகள் உள்ளன. ரேஞ்ச்-டாப்பிங் சிஎன்ஜி வகை வாகனங்களுக்கான விலைகள் சுமார் ரூ.5,000 உயர்ந்துள்ளது.
அப்டேடட் பஞ்ச்சின் அம்சங்கள்
அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ப்யூர் (O) பெட்ரோல் வேரியண்ட் சென்ட்ரல் லாக்கிங், பவர்ட் விண்டோஸ், பவர்ட் ORVMகள், வீல் கவர்கள் ஆகிய பிட்களை பேஸ் ப்யூர் டிரிம்மை காட்டிலும் கூடுதலாக பெறுகிறது. இதற்கிடையில், அட்வென்ச்சர் எஸ் மற்றும் அட்வென்ச்சர் + எஸ், அவற்றின் பெயர்கள் குறிப்பிடுவது போல, அட்வென்ச்சர் ரிதம் டிரிமில் சன்ரூஃப் மற்றும் பின்புற ஏசி வென்ட்களைச் சேர்க்கின்றன. Punch Accomplished + மற்றும் அதற்கு மேலே உள்ள வேரியண்ட்கள் புதிய மற்றும் பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரையைப் பெறுகின்றன. கிரியேட்டிவ் + மற்றும் கிரியேட்டிவ் + எஸ் டிரிம்கள் வயர்லெஸ் சார்ஜரையும் சேர்க்கின்றன. குறிப்பிட்ட வேரியண்டைப் பொறுத்து,
வண்ண விருப்பங்கள்:
பஞ்ச்சுக்கான வெளிப்புற வண்ண விருப்பங்களும் ஓரளவு திருத்தப்பட்டுள்ளன. ப்யூர் வேரியண்ட்களில் ஓர்கஸ் ஒயிட் மற்றும் டேடோனா கிரே ஃபினிஷ்கள் மட்டுமே கிடைக்கும். அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர் ரிதம் டிராபிகல் மிஸ்ட் ஃபினிஷையும் கொண்டுள்ளது. சன்ரூஃப் பொருத்தப்பட்ட அட்வென்ச்சர் டிரிம்கள் ஒரு கலிப்சோ ரெட் பெயிண்ட் சாயலை சேர்க்கின்றன. அகம்ளிஸ்ட் வேரியண்ட்கள் மீடியர் ப்ரோன்ஸ் நிறத்தில் கிடைக்கின்றன. இறுதியாக, கிரியேட்டிவ் வகைகள் ஐந்து டூயல்-டோன் பூச்சுகளில் கிடைக்கின்றன. மிட்-ஸ்பெக் வகைகளில் கிடைக்கும் Meteor Bronze ஆனது சிக்னேச்சர் Tornado ப்ளூ ஃபினிஷ் மூலம் மாற்றப்பட்டுள்ளது.
விலை விவரங்கள்:
இயந்திர ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும், பஞ்சில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது, டாடாவின் மிகச்சிறிய SUV-யின் விற்பனை பல்வேறு அம்சங்களின் புதுப்பித்தலுடன் தொடரும் . ஹூண்டாய் எக்ஸ்டெர் (ரூ.6-ரூ.10.43 லட்சம்), சிட்ரோயன் சி3 (ரூ.6.16-ரூ.9.42 லட்சம்^) மற்றும் மாருதி இக்னிஸ் (ரூ.5.84-ரூ.8.06 லட்சம்) போன்றவற்றுக்கு டாடா பஞ்ச் தொடர்ந்து போட்டியாக உள்ளது.