Upcoming E Scooters: Suzuki e-Access முதல் Ather EL வரை.. இந்தியாவில் அறிமுகமாகும் இ ஸ்கூட்டர்கள் லிஸ்ட்!
Upcoming E Scooters: இந்தியாவில் அறிமுகமாக உள்ள புதிய இ ஸ்கூட்டர்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகன ஓட்டிகளின் விருப்பமாக தற்போது மின்சார வாகனங்கள் மாறி வருகிறது. இதனால், இந்தியாவில் இ ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் நிறுவனங்கள் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி வகித்து வரும் சூழலில், பல முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமும் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் புதியதாக அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. New-Gen Bajaj Chetak:
இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனம் பஜாஜ். இவர்களில் Bajaj Chetak இ ஸ்கூட்டர் நல்ல விற்பனையாகி வரும் நிலையில், இதன் புதிய வெர்சனாக New-Gen Bajaj Chetak இ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த பஜாஜ் அறிவித்துள்ளது. இந்த இ ஸ்கூட்டர் அடுத்தாண்டு அறிமுகம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. 3.5 கிலோவாட் பேட்டரியுடன் 150 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமாக உள்ளது.
2. Suzuki e-Access:

இந்தியாவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருப்பது சுசுகி. இவர்களின் Suzuki Access ஸ்கூட்டர் விற்பனை அசத்தலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதன் மின்சார வெர்சனாக Suzuki e-Access அறிமுகப்படுத்த சுசுகி ஆர்வம் காட்டி வருகிறது. இதன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இது 3.07 கிலோவாட் பேட்டரியுடன் 95 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும், 4.1 கிலோவாட் பேட்டரியில் ஒரு வேரியண்டும் தயாரித்து வருகின்றனர். 15 என்.எம். டார்க் இழுதிறன் ஆற்றல் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.
3. Yamaha RY01:
இந்தியாவில் இரு சக்கர வாகன சந்தையில் தனக்கென தனி இடம் வைத்துள்ள நிறுவனம் யமஹா. மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவில் கால்தடம் பதிக்க யமஹா ஆர்வம் காட்டி வருகிறது. அடுத்தாண்டு இந்த இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ளது. இதன் சோதனை ஓட்டம் இந்தாண்டு மே மாதம் நடந்துள்ளது. இதில் 4 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டதாக இந்த இ ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது.

4. Ather EL:
இந்தியாவில் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருப்பது ஏதர். இவர்களின் புதிய தயாரிப்பு Ather EL ஆகும். இது பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதன் மைலேஜ், பேட்டரி அவர்களின் முந்தைய படைப்பைக் காட்டிலும் அதிகளவு இருக்கும் வகையில் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த Ather EL இ ஸ்கூட்டர் அடுத்தாண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. Simple Energy New Family-Oriented E-Scooter:
ஓலா, ஏதர் நிறுவனங்களுக்கு போட்டி நிறுவனமாக திகழ்வது Simple Energy நிறுவனம் ஆகும். இவர்கள் புதிய இ ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்து வருகின்றனர். இந்த இ ஸ்கூட்டர் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மைலேஜ், பேட்டரி திறன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் போட்டி நிறுவனங்களுக்கு ஏற்ப தங்கள் வாடிக்கையாளர்களை கவர அம்சங்களையும், வசதிகளையும் உருவாக்க முடிவு செய்துள்ளனர்.





















