மேலும் அறிய

TVS Raider 125 | விற்பனைக்கு வந்தது TVS ரைடர் 125சிசி பைக், என்னென்ன வசதிகள் தெரியுமா?

ரூ.77,500 ஆரம்ப விலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரைடர் 125சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் 125சிசி பைக் பிரிவில் எந்தவொரு மோட்டார்சைக்கிளையும் விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக இப்பிரிவில் ஸ்டார் சிட்டி125 மற்றும் விக்டர் ஆகிய இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இவை தற்போது விற்பனையில் இல்லை. இந்த நிலையிலேயே 125 சிசி மோட்டார்சைக்கிள் வாகன பிரிவில் களமிறங்கும் வகையில் நிறுவனம் புதிய ரெய்டர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிரக்கின்றது. அதேவேலையில் நிறுவனம் 125 சிசி ஸ்கூட்டர்கள்பிரிவில் என்டார்க் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரிலும் 125 சிசி எஞ்ஜினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் என்டார்க் 125 மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜினே ஜூபிடர் 125 ஸ்கூட்டரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் 125 சிசி இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு அதிகம் என்கிற காரணத்தினால் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த பிரிவை மையப்படுத்தி தனது புதுமுக வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன. அந்தவகையில், டிவிஎஸ் நிறுவனம் இம்முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

TVS Raider 125 | விற்பனைக்கு வந்தது TVS ரைடர் 125சிசி பைக், என்னென்ன வசதிகள் தெரியுமா?

லிட்டருக்கு 67 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் மோட்டார் குறிப்பிட்டுள்ள நிலையில் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கொண்டு மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெட்ரோல் டேங்க், இரு பிரிவு கொண்ட இருக்கைகள் என இந்த மாடல் வாகனத்திற்கு மார்க்கெட் போட்டியாளர்களான கிளாமர் எக்ஸ்டெக், பல்சர் 125 மற்றும் எஸ்பி125 பைக்கிற்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது. 124.8 சிசி, மூன்று வால்வு, காற்றினால் குளிரூட்டப்படுகின்ற இயந்திரம் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 11.4 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 11.2 என்.எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் FI ஆப்ஷனை பெற்று ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 மைலேஜ் லிட்டருக்கு 67 கிமீ என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ரைடர் 125 மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் மூலம் இயங்குகிறது. பிரேக்கிங் அமைப்பில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம்  மற்றும் பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுவீல் பேஸ் 1,326 மிமீ மற்றும் இருக்கை உயரம் 780 மிமீ கொண்டு டேங்க் கொள்ளளவு 10 லிட்டராகவும், 123 கிலோ மொத்த எடையையும் கொண்டுள்ளது.

TVS Raider 125 | விற்பனைக்கு வந்தது TVS ரைடர் 125சிசி பைக், என்னென்ன வசதிகள் தெரியுமா?

TVS ரைடரில் முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கியர் பொசிஷன் இன்டிகேட்டர்  வசதியும் உள்ளது. மேலும் சில மாதங்களில் ப்ளூடூத் இணைப்பைக் கொடுக்க, TFT திரையை கூடுதல் ஆப்ஷனலாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கும் அதிநவீன 125 சிசி பைக்குகளில் ஒன்றாக டிவிஎஸ் ரைடர் பைக்கை குறிப்பிடலாம். டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கிற்கு கவர்ச்சிகரமான டிசைன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. ஓரளவிற்கு குறைவான விலையில் பிரீமியமான பைக்கை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு டிவிஎஸ் ரைடர் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். டிவிஎஸ் ரைடர் 125 சிசி பைக்கின் ட்ரம் பிரேக் வேரியண்ட்டின் விலை 77,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் விலை 85,469 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget