TVS Orbiter e- Scooter: க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் - மிரட்டலான டிசைன், ரேஞ்ச், 6 கலர்கள் - விலை
TVS Orbiter e- Scooter: டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டரான ஆர்பிட்டர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TVS Orbiter e- Scooter: டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டரான ஆர்பிட்டரின் விலை ரூ.99,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார ஸ்கூட்டர் - விலை
இந்திய இருசக்கர வாகன சந்தையில் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவரான, டிவிஎஸ் தனது புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.ஆர்பிட்டர் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மின்சார ஸ்கூட்டரின் தொடக்க விலை 99 ஆயிரத்து 990 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் சார்பில் விற்பனையில் உள்ள மின்சார ஸ்கூட்டரான, iQube மாடலுக்கு கீழே புதிய ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இந்த ஸ்கூட்டரானது OLA S1, சேடக் மற்றும் விடா VX2 ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுடன் மோத உள்ளது. விலை அடிப்படையில் போட்டியாளர்களை காட்டிலும், ஆர்பிட்டர் மலிவானதாக உள்ளது.
Go Orbiting with the all-new TVS Orbiter.
— TVS Motor Company (@tvsmotorcompany) August 28, 2025
A ride that moves with you, wherever you go.
Always ready, always reliable, and Always On - designed to make your daily lifestyle effortless, exciting, and unforgettable.
டிவிஎஸ் ஆர்பிட்டர் - வடிவமைப்பு விவரங்கள்:
டிவிஎஸ் நிறுவனம் 80 நாடுகளில் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி, சர்வதேச தரத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஆர்பிட்டர் வடிவமைக்கப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் இந்த ஸ்கூட்டரை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது. மாடர்ன் டிசைன் உடன் மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பு கவனத்தை ஈர்க்கிறது. பெரிய அளவிலான வளைவு நெளிவுகள் இன்றி, எளிமையாகவும், மல்டி கலர் ஆப்ஷனையும் வழங்குகிறது. முகப்பு விளக்கு க்ளஸ்டர் உயரமாக பொருத்தப்பட்டு, அதனுடன் பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளன.
நிலைத்தன்மை மற்றும் வசதியான பயணத்திற்காக ஸ்கூட்டர் சந்தையிலேயே முதல்முறையாக, ஆர்பிட்டர் மாடலில் 14 இன்ச் முன்புற சக்கரத்தை டிவிஎஸ் வழங்கியுள்ளது. 845 மில்லி மீட்டர் ஃப்ளாட் சீட், 290 மில்லி மீட்டர் ஃபுட் போர்ட், 169 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. நியன் சன்பர்ஸ்ட் ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் க்ரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைடானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் ஆகிய 6 வண்ண விருப்பங்களில் ஆர்பிட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் ஆர்பிட்டர் - தொழில்நுட்ப அம்சங்கள்
ஆர்பிட்டரில் ஆட்டோமேடட் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உடன் 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்ட்டுள்ளது. ஜியோ ஃபென்சிங், டைம் ஃபென்சிங், க்ராஷ்/ஃபால் அலெர்ட் மற்றும் டோவிங் அலெர்ட்ஸ் ஆகிய கனெக்டட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்கமிங் கால் அலெர்ட் உள்ளிட்ட பல அவசியமான தகவல்களை வழங்கக் கூடிய மல்டி கலர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யுஎஸ்பி சார்ஜிங், டர்ன் - பை-டர்ன் நேவிகேஷன் தெஃப்ட் அலெர்ட் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட் ஆகிய அம்சங்களையும் பெற்றுள்ளது. இந்த செக்மெண்டில் எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வகையில் ஆர்பிட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ரிவர்ஸ் பார்கிங் வசதி ஏற்படுத்தியுள்ளதாகவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் ஆர்பிட்டர் - பேட்டரி விவரங்கள்
டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டரில் 3.1 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 158 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. iQube ஸ்கூட்டரின் மிகவும் மலிவு விலை எடிஷன் 2.2kWh பேட்டரியை பயன்படுத்தி வழங்கும், 94 கிலோ மீட்டர் ரேஞ்சை காட்டிலும் புதிய ஆர்பிட்டர் 64 கிலோ மீட்டர் கூடுதல் ரேஞ்ச் வழங்குவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஸ்கூட்டர் ஒரே ஒரு பேட்டரி வேரியண்டில் மட்டுமே தற்போது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆகும் நேரம் தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகவில்லை. அதேநேரம், புதிய ஆர்பிட்டர் ஸ்கூட்டருக்கான முன்பதிவை, டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் விற்பனை தளங்களை அணுகி பயனர்கள் மேற்கொள்ளலாம்.





















