Apache rtr 310: 300சிசி ஹை ஸ்பீடில் வருகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புது பைக்.. அபாச்சி ஆர்டிஆரின் 310 அசத்தல் விவரங்கள்
டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய அபாச்சி ஆர்டிஆரின் 310 பைக் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய அபாச்சி ஆர்டிஆரின் 310 பைக் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிஎஸ்-ன் அசத்தல் அறிவிப்பு:
இந்திய இருசக்கர வாகன ஆட்டோமொபைல் சந்தையில், டிவிஎஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, புதுப்புது மாடல் வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் கடந்த 2017ம் ஆண்டு டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலை கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்ட்ரீட் ஃபைட்டர் வெர்ஷனாக அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடலை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல், BMW G 310 R-ஐ தழுவி உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீடு எப்போது..!
புதிய வாகனத்தின் அறிவிப்பு தொடர்பாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் செப்டம்பர் 6-ம் தேதி அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நிகழ்வில் புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், இந்த மாடலின் பெயர் மற்றும் விவரங்களை டிவிஎஸ் நிறுவனம் ரகசியமாகவே வைத்திருக்கிறது.
இன்ஜின் விவரம்:
புதிய டிவிஎஸ் அபாச்சி RTR310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யூனிட் 33.5 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. அதோடு, ஸ்லிப்பர் கிளட்ச் வழியாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டிவிஎஸ் இன்ஜின் ஒரு சிறந்த இடைப்பட்ட கிராண்டிற்கு மாற்றியமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த பைக் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 158 கி.மீ. வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு:
அப்பாச்சி ஆர்டிஆர் 310 மோட்டார் சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியுள்ளன. அதன்படி இந்த மாடலின் டெயில் லைட் டுவின்-பாட் டிசைன் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டயர் ஹக்கரில் நம்பர்பிலேட் மற்றும் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் RR310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஹார்டுவேரை பொருத்தவரை அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. புளூடூத் இணைப்பை வழங்கும் கிடைமட்ட TFT திரையைப் பெறலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட வாய்ப்புள்ளது. தோற்றத்தில் புதிய அபாச்சி RR310 மாடலில் இருப்பதை போன்றில்லாமல், RTR310 மாடலில் அப்ரைட் எர்கோனோமிக்ஸ் வழங்கப்படுகிறது. இதனால் ஹேன்டில்பார் அகலமாக காட்சியளிக்கிறது.
விலை விவரங்கள்:
புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 மாடலின் விலை RR 310-ஐ விட ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அதன்படி, அப்பாச்சி RTR 310 விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், என நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.