Budget Friendly EV: குறைஞ்ச விலைக்கே 315 கிமீ ரேஞ்ச், சிட்டியில் மாஸ் காட்டும் ஹேட்ச்பேக் - சின்ன ஃபேமிலிக்கான கார்
Budget Friendly Electric Car: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் ரூ.8 லட்சத்திற்கே 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் வழங்கும் மின்சார கார் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget Friendly Electric Car: டாடாவின் டியாகோ மின்சார கார் மாடலான டியாகோ, நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக உள்ளது.
டாடா டியாகோ மின்சார கார்:
எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயர்வதன் விளைவாகவே, பொதுமக்கள் மின்சார கார்களை நோக்கி அதிகளவில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், பல முன்னறி கார் உற்பத்தி நிறுவனங்களும் அதிகளவில் மின்சார கார்களை சந்தைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக அம்சங்களை குறைத்து ரேஞ்சிற்கு முக்கியத்துவம் அளித்து மலிவு விலை கார்களை அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கவனத்தை ஈர்கக்கூடிய வகையில் சிறிய மற்றும் சிறந்த 5 சீட்டர் மின்சார காராக டாடாவின் டியாகோ கார் மாடல் திகழ்கிறது.
Here comes the Tata Motors Tiago EV, launched at Rs 8.49 lakhs. This is an introductory price for first 10,000 consumers. pic.twitter.com/0jyLOU7hKW
— Chetan Bhutani (@BhutaniChetan) September 28, 2022
டியாகோ மின்சார காரின் அம்சங்கள்:
காரின் உட்புறத்தை கவனத்தில் கொண்டால், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் கூடிய டிஜிட்டல் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், ஆண்டி லாக் பிரேக்ஸ் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வசதியான இருக்கைகள், தரமான ஸ்பீக்கர் செட்-அப், பாதுகாப்பிற்கான ஏர்-பேக்குகள், அலாய் வீல்கள் என ஏராளமான அம்சங்கள் டியாகோவில் இடம்பெற்றுள்ளன.
டியாகோ மின்சார காரின் பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்
டாடா டியாகோவின் ரேஞ்ச் குறித்து பேசுகையில், பானெட்டின் கீழே 74 bhp மற்றும் 114 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 24 KWh பேட்டரியை இந்த கார் கொண்டுள்ளது. சிறந்த ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டிருப்பதன் மூலம், நகர்ப்புறங்களிலும், அவசரம் அதிகம் உள்ள பகுதிகளிலும் ஓட்டுவதற்கு டியாகோ சிறந்த தேர்வாக உள்ளது. இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், ஒரே அடியாக 315 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா டியாகோ EV லுக்
வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும்போது வழக்கமான டியாகோவை போன்றே மின்சார எடிஷனும் காட்சியளிக்கிறது. அதாவது கவனத்தை ஈர்கக்கூடிய ஹேட்ச்பேக் ஆக காட்சியளிக்கிறது. ஆனால், அதில் மின்சார எடிஷனுக்கு என சில நுணுக்கமான மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, ப்ளூ அக்செண்ட் மற்றும் EV பேட்ஜ் ஆகியவை காரை தனித்துவமாக மாற்றுகின்றன. உட்புறத்தில் கேபின் நவீனமாகவும், வசதியாகவும் உள்ளது. 7 இன்ச் டச் ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டாடாவின் Zகனெக்ட் ஆப் மூலம் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
டாடா டியாகோ விலை, போட்டியாளர்கள்:
டாடா டியாகோ கார் மாடல் XE MR, XT MR, XT LR, XZ Plus Tech LUX LR என நான்கு வேரியண்ட்களில், மொத்தம் 6 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி ரூ.11.14 லட்சம் வரை நீள்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இந்த கார் எம்ஜி கோமெட், சிட்ரோயன் இசி3, டாடா பஞ்ச் மற்றும் மஹிந்திராவின் XUV400 ஆகிய மின்சார கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது. இருப்பினும் மலிவு விலையில் அதிகப்படியான ரேஞ்ச், அட்டகாசமான அம்சங்கள் நிறைந்து, சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற கார் மாடலாக டாடா டியாகோ வாடிக்கையாளர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.





















