மேலும் அறிய

Car Maintenance | 'ஊரடங்கு காலத்துல காரை கவனிக்காம விட்டுடாதீங்க' - வீண் செலவை தவிர்க்க சில டிப்ஸ்!

கார்கள் இனி ஊரடங்கு நீக்கப்படும் வரை ஓய்வில் தான் இருக்கப்போகின்றன. இந்த லாக்டவுன் நேரத்தில் காரையும் நாம் கவனித்துக்கொண்டால் எதிர்காலத்தில் மெக்கானிக் செலவில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். 

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாகவுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று முதல் ஒருவாரத்திற்கு அமலாகியுள்ளது. மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி - மீன் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. 

அனுமதிக்கப்பட்ட நபரை தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடித்தால் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஊரடங்கு என்பது நமக்கு மட்டுமல்ல, நம் கார்களுக்கும் தான். வழக்கமாக தினமும் ஓடிக்கொண்டிருக்கும் கார்கள் இனி ஊரடங்கு நீக்கப்படும் வரை ஓய்வில் தான் இருக்கப்போகின்றன. இந்த லாக்டவுன் நேரத்தில் காரையும் நாம் கவனித்துக்கொண்டால் எதிர்காலத்தில் மெக்கானிக் செலவில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். 

ஹேண்ட் பிரேக் வேண்டாம்:

Car Maintenance | 'ஊரடங்கு காலத்துல காரை கவனிக்காம விட்டுடாதீங்க' - வீண் செலவை தவிர்க்க சில டிப்ஸ்!

காரை எங்கே நிறுத்தினாலும் நம் கை நேராக ஹேண்ட் பிரேக்கை நோக்கித்தான் போகும். காரை பார்க் செய்யும் போது ஹேண்ட் பிரேக் பயன்படுத்துவது மிக முக்கியமானது, பாதுகாப்பானது. ஆனால் நீண்ட நாட்களாக கார் நிறுத்தப்பட்டே இருக்கும் என்றால் ஹேண்ட் பிரேக் போடுவது நல்லதல்ல. இதனால் பிரேக் ஜாமாக வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக காரை கியரில் நிறுத்தினால் போதுமானது. சரிவில் நிற்பது போன்ற பார்க்கிங் என்றால் ரிவர்ஸ் கியரில் காரை நிறுத்தலாம். மேட்டில் நிற்பது போன்ற பார்க்கிங் என்றால் முதல் கியரில் வண்டியை நிறுத்த வேண்டும்.  அதுபோக வழக்கமாக பயன்படுத்துவது போல டயருக்கு கீழே கட்டை, அல்லது கற்களை கொடுத்து நகராமல் நிறுத்தி வைக்கலாம்.

கார் கவர்:

Car Maintenance | 'ஊரடங்கு காலத்துல காரை கவனிக்காம விட்டுடாதீங்க' - வீண் செலவை தவிர்க்க சில டிப்ஸ்!
நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்போகும் காருக்கு உறை மிக முக்கியம். கார் சரியான பார்க்கிங்கில் வெயில், மழை படாத இடம் என்றால் பரவாயில்லை. ஆனால் நேரடியாக வெயில், மழைபடும் பகுதி என்றால் காரை கவர் கொண்டு மூடுவது மிக நல்லது. அதிக வெயிலால் காரின் பெயிண்ட் தரம் இழக்க வாய்ப்புள்ளது. முடிந்தவரை பாதுகாப்பான கூரைக்கு கீழே காரை பார்க் செய்ய வேண்டும். இப்போது புயலும், மழையும் கூட வருவதால் மரங்களுக்கு கீழே காரை பார்க் செய்வதை தவிர்க்கலாம். 

பேட்டரியில் கவனம்:

Car Maintenance | 'ஊரடங்கு காலத்துல காரை கவனிக்காம விட்டுடாதீங்க' - வீண் செலவை தவிர்க்க சில டிப்ஸ்!
காருக்கு பேட்டரி மிக முக்கியமான ஒன்று. நீண்ட நாட்கள் நிறுத்திவிட்டு பின்னர் ஸ்டார்ட் செய்தால் கார்  ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும். பயன்படுத்தாத நேரத்தில் பேட்டரி காலியாவதால்  ஏற்படும் சிக்கல் இது. பேட்டரியை பொருத்தவரை அடிக்கடி கார் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அதனால் லாக்டவுன் என்றாலும் வாரத்திற்கு ஒருநாள் காரை ஸ்டார்ட் செய்து 10-15 நிமிடங்கள் இஞ்சினை ஓட விட வேண்டும். அபார்ட்மெண்ட் மாதிரியான இடம் என்றால் அந்த பகுதிக்குள்ளேயே கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ஒரு ரவுண்ட் காரை ஓட்டலாம்.

எலிகளிடம் இருந்து ஜாக்கிரதை:

Car Maintenance | 'ஊரடங்கு காலத்துல காரை கவனிக்காம விட்டுடாதீங்க' - வீண் செலவை தவிர்க்க சில டிப்ஸ்!
எலிகள் காரின் எதிரி என்றே சொல்லலாம். கார் பயன்பாட்டில் இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் நீண்ட நாட்களாக கார் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டால் உங்கள் கார் எலிகளுக்கு வீடாகலாம். காரில் உள்ள பிளாஸ்டிக், ஒயர்கள் என மனம்போன போக்கில் எலிகள் கடித்து குதறிவிடும். இது மிகப்பெரிய செலவைத் தான் உண்டாகும். இந்த லாக்டவுன் காலத்தில் எலிகளிடம் இருந்து காரை பாதுகாப்பதுதான் மிகப்பெரிய வேலை. எலிகளுக்கு எதிரான ஸ்பிரே ஆன்லைன் கிடைக்கிறது. மெடிக்கல் ஸ்டோரிலும் இது கிடைக்கும். இந்த ஸ்பிரே மூலம் எலிகள் வருவதை தடுக்கலாம். காருக்கு கீழே முக்கியமான இடங்களில் எலி ஸ்பிரே, எலி கேக் பயன்படுத்தி எலியிடம் இருந்து காரை பாதுகாத்துக்கொள்ளலாம்.

அடிக்கடி பரிசோதியுங்கள்:

Car Maintenance | 'ஊரடங்கு காலத்துல காரை கவனிக்காம விட்டுடாதீங்க' - வீண் செலவை தவிர்க்க சில டிப்ஸ்!

இந்த கொரோனாவும், ஊரடங்கும் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியாத நிலையில் உங்கள் கார் மறுபடி எப்போது வழக்கமான பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரியாது. எனவே காரை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி இஞ்சினை ஆன் செய்வது, லைட், வைபர்ம் ஹாரன்  போன்ற எலெக்ட்ரிகள் வேலைகளையும் பயன்படுத்தி பரிசோதிக்க வேண்டும். கார் கதவு ஜன்னலை திறந்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ளலாம். நினைவில் கொள்ளுங்கள். கார் தொடர்பாக நாம் வீட்டை விட்டு கீழே சென்றாலும் கூட நாம் முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். காரின் பாதுகாப்பை விடவும் நம் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Embed widget