![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tata Nexon CNG: அப்படி போடு..! சிஎன்ஜி எடிஷனில் டாடா நெக்ஸான் அறிமுகம் - மைலேஜ் எவ்வளவு? விலை ஓகேவா?
Tata Nexon CNG: டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் மாடல், சிஎன்ஜி எடிஷனில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
![Tata Nexon CNG: அப்படி போடு..! சிஎன்ஜி எடிஷனில் டாடா நெக்ஸான் அறிமுகம் - மைலேஜ் எவ்வளவு? விலை ஓகேவா? Tata Nexon CNG launched check price spec features other details Tata Nexon CNG: அப்படி போடு..! சிஎன்ஜி எடிஷனில் டாடா நெக்ஸான் அறிமுகம் - மைலேஜ் எவ்வளவு? விலை ஓகேவா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/25/9353377d4a8823a1bd88bd08812a542d1727232471635732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tata Nexon CNG: டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் மாடல் சிஎன்ஜி எடிஷனின், தொடக்க விலை ரூ.8.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகம்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் சிஎன்ஜி எடிஷன் கார் மாடலை, ரூ.8.99 லட்சம் என்ற விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டர்போசார்ஜ் செய்யப்பட்ட CNG கார் மாடலாக, டாடா பிராண்டிற்கான மற்றொரு முதல் வாகனமாகும். சிஎன்ஜி அடிப்படையில் இயங்கும் நெக்ஸான் எட்டு வகைகளில் கிடைக்கிறது. டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் + பிஎஸ் மேனுவல் வேரியன்ட்டின் விலை ரூ.14.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் மற்ற CNG போர்ட்ஃபோலியோவைப் போலவே, Nexon iCNG பிராண்டின் இரட்டை சிலிண்டர் CNG கிட்டைப் பெறுகிறது.
வேரியண்ட் & அம்சங்களின் விவரங்கள்:
பெட்ரோல் நெக்ஸான் விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்குவதை ஒப்பிடும்போது, சிஎன்ஜி எடிஷன்களின் தொடக்க விலை ரூ.1 லட்சம் அதிகமாக உள்ளது. Nexon CNG ஆனது Smart, Smart +, Smart + S, Pure, Pure S, Creative, Creative + மற்றும் Fearless + PS வேரியண்ட்களில் கிடைக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர்கள் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி போன்ற அம்சங்களை ரேஞ்ச்-டாப்பிங் வேரியண்ட் பெறுகிறது. அதிகபட்ச விலையாக ரூ.14.59 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ESP போன்ற பாதுகாப்பு கிட் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. டாப்-ஸ்பெக் வேரியண்ட் ஆட்டோ ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், 360 டிகிரி கேமரா, ஒரு டயர் பிரஷர் மானிட்டர், முன் பார்க்கிங் சென்சார்கள், ஒரு ஆட்டோ டிம்மிங் IRVM என பல அம்சங்களைப் பெறுகிறது.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி பவர்டிரெய்ன்
டாடா நெக்ஸான் சிஎன்ஜி 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதன் மூலம் 100 ஹெச்பி மற்றும் 170 என்எம் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. பெட்ரோல் மாடலை விட 20 ஹெச்பி குறைக்கிறது, அதே நேரத்தில் முறுக்குவிசையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோவிற்கு 24km மைலேஜ் வழங்கும் என கூறப்படும் நிலையில், 60-லிட்டர் CNG டேங்கை கொண்டுள்ளது. Nexon iCNG ஆனது மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வருகிறது. ஆனால், Tiago மற்றும் Tigor CNG போன்று, இது AMT வேரியண்டை எதிர்காலத்தில் பெறலாம்.
Nexon iCNG பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷன்களில் இருந்து 61 லிட்டர் குறைந்த 321 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. இதற்கு இதில் உள்ள இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பமே காரணமாகும். மாருதி ஃபிராங்க்ஸ் சிஎன்ஜி (ரூ 8.47 லட்சம்-9.33 லட்சம்), டொயோட்டா டெய்சர் சிஎன்ஜி (ரூ 8.72 லட்சம்) மற்றும் மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி (ரூ. 9.29 லட்சம்-10.65 லட்சம்) ஆகியவற்றுக்கு போட்டியாக நெக்ஸான் சிஎன்ஜி இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)