மேலும் அறிய

Tata EV Showroom: அட்ரா சக்க..! நாட்டிலேயே முதன்முறை - மின்சார கார்களுக்கான பிரத்யேக டாடா ஷோ ரூம்

Tata EV Showroom: நாட்டிலேயே முதன்முறையாக மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக ஷோ-ரூமை, டாடா நிறுவனம் அமைத்துள்ளது.

Tata EV Showroom: நாட்டிலேயே முதன்முறையாக மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக ஷோ-ரூமை, குருகிராம் பகுதியில் டாடா நிறுவனம் அமைத்துள்ளது.

மின்சார வாகன பயன்பாடு: 

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வழக்கமான எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களுக்கு மாற்று என, மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அம்முயற்சி இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பல்வேறு தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி மின்சார வாகனங்களின் இந்தியா உட்பட உலக நாடுகளிலும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை உணர்த்தும் விதமாக தான் நடப்பாண்டில் பல முன்னணி நிறுவனங்களும், புதுப்புது மின்சார கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தின. மேலும், பழைய கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, அதற்கான தொகையை மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்து வருகின்றன இதன் காரணமாக இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான ஆப்ஷன்கள் என்பது நடப்பாண்டில் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. இந்நிலையில் தான், நாட்டிலேயே முதன்முறையாக மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக ஷோ-ரூமை, டாடா நிறுவனம் அமைத்துள்ளது.

மின்சார கார்களுக்கான பிரத்யேக ஷோ-ரூம்:

மின்சார கார்களை மட்டும் விற்பனை செய்யும் நாட்டின் முதல் பிரத்யேக ஷோ-ரூமை குருகிராம் நகரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திறந்துள்ளது. மேலும் பல நகரங்களிலும் இத்தகைய ஷோ-ரூம்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Tata.ev ஆனது ஒரு தனி நிறுவனமாகவும் பிராண்டாகவும் உருவாக்கப்பட்ட பின்னர், அதன் கார்கள் நிலையான டாடா கார்களுடன் ஒப்பிடும் போது வேறுபட்ட வடிவமைப்பு மொழி மற்றும் அம்சங்களைக் கொண்டுள்ளன.

ஷோ-ரூம் வடிவமைப்பு:

இரண்டு கடைகளை உள்ளடக்கிய இந்த ஷோ-ரூம் மற்ற டாடா ஷோரூம்களுடன் ஒப்பிடும்போது பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளதோடு, வடிவமைப்பிலும் வேறுபட்டுள்ளது. இங்கு மின்சார கார்கள் விற்பனை செய்யப்படுவதோடு, Tata EVகளுக்கான பிரத்யேக சேவைகளையும் வழங்கப்படுகிறது. மின்சார கார்களுக்கான இந்திய சந்தையில் பெரும்பான்மையான பங்கைக் கொண்டுள்ள, டாடா தனது ஆதிக்கத்தைக் கட்டியெழுப்பவும் அதன் வழக்கமான இன்ஜின் கொண்ட கார்களில் இருந்து வேறுபட்ட அடையாளத்தை உருவாக்கவும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.  இந்த கடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த தோற்றத்தைக் கொண்டுள்ளன.  மேலும் கார்களைத் காட்சிப்படுத்துவதற்கான திரைகளையும் கொண்டிருக்கும்.

புதிய ஷோ-ரூமின் நோக்கம் என்ன?

வழக்கமான ஷோரூம்களிலும் EV கார்கள் தொடர்ந்து விற்கப்படும் அதே வேளையில்,  EV வாங்குபவர் வழக்கமான கார் வாங்குபவரிடமிருந்து வேறுபட்டவர் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு, Nexon EV பிளஸ் Tiago மற்றும் Tigor EV உட்பட அனைத்து டாடா EVக்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதோடு, ஏற்கனவே உள்ள ஷோரூம்களில் இடவசதி குறைவாக இருப்பதும் இதற்கு காரணமாக இருப்பதால், EV-களுக்கான தனி ஸ்டோர் காலத்தின் தேவையாக டாடா நிறுவனம் கருதுகிறது. அதன் EV தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை பன்ச் EV, ஹாரியர் EV, Curvv EV மற்ரும் முதன்மையான சியரா EV ஆகியவற்றின் மூலம் மேலும் விருவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget