Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
Simple Energy E-Scooter: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் கொண்ட முதல் மின்சார ஸ்கூட்டரை, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Simple Energy E-Scooter: நாட்டின் 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் கொண்ட முதல் மின்சார ஸ்கூட்டரின் விலையை ரூ.2.10 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நாட்டின் முதல் 400கி.மீ., ரேஞ்ச் இ-ஸ்கூட்டர்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது மின்சார இருசக்கர வாகனங்களுக்கான போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் விதமாக, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இரண்டாவது தலைமுறை ஸ்கூட்டர் ரேஞ்சை அறிமுகப்படுத்தியுள்ளது. சிம்பிள் அல்ட்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரானது, 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதுவரை எந்தவொரு மின்சார ஸ்கூட்டரும் கோராத ரேஞ்ச் இதுவாகும். புதிய அல்ட்ரா மாடலுடன், சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் ஒன் எஸ் என்ற தனது பழைய ஸ்கூட்டர்களை மேம்படுத்தி இரண்டாவது தலைமுறை எடிஷன்களையும், பெங்களூருவை மையாக கொண்ட சிம்பிள் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிம்பிள் அல்ட்ரா இ - ஸ்கூட்டர் - பேட்டரி விவரங்கள்:
புதிய சிம்பிள் அல்ட்ரா வாகனமானது இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் இதுவரை இல்லாத வகையில் 6.5 kWh என்ற மிகப்பெரிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. நீண்ட தூர பயணத்தின் போது ஏற்படும் ரேஞ்ச் அச்சத்தை போக்கும் வகையில், உச்சபட்ச செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.77 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பணிக்குமாம். இதன் மூலம் நாட்டின் அதிவேகமான இரண்டாவது மின்சார ஸ்கூட்டர் என்ற பெருமையை பெறுகிறது.
சிம்பிள் அல்ட்ரா இ - ஸ்கூட்டர் - விலை
அல்ட்ரா ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவானது சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ.2.10 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டின் நடுப்பகுதியில் அதாவது ஜுன் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நகர்ப்புற பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் ஒன் ஜென் 2 ஸ்கூட்டர்கள்:
சிம்பிள் ஒன் இரண்டாவது தலைமுறை எடிஷன்கள் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 4.5kWh பேட்டரி பேக் கொண்ட எடிஷனானது ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 236 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பெரிய 5kWh பேட்டரி பேக் கொண்ட எடிஷனானது ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 265 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே உடனடியாக விற்பனைக்கு தயாராகி உள்ளன.
அதேநேரம், இரண்டாவது தலைமுறை சிம்பிள் ஒன் எஸ் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 190 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எடை 8 கிலோ மீட்டர் அளவிற்கு குறைக்கப்பட்டு தற்போது 129 கிலோவுடன் தயாரிக்கப்பட்டு ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் அம்சங்கள், வசதிகள்:
ஒரு லிட்டர் ஃப்ரண்ட் க்ளோவ்பாக்ஸ், சார்ஜிங் போர்ட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்ட், புதிய ரைடர் கண்ட்ரோல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. ட்ராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், 4 லெவல் ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங்க் ஆகியவற்றுடன் சேர்ந்து விரிவுபடுத்தப்பட்ட 35 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளும் உள்ளன. இரண்டு வகைகளும் ஆறு ட்ரைவிங் மோட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் CBS உடன் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டாவது தலைமுறை சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் 2.7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஒன்எஸ் எடிஷனானது டச் அல்லாத ஸ்க்ரீனை பயன்படுத்துகிறது. இரண்டும் LTE மற்றும் புளூடூத்துடன் 5G e-SIM இல் இயங்குகின்றன,ஓவர் தி ஏர் அப்டேட்கள், நேவிகேஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க் அசிஸ்ட் மற்றும் ஃபைண்ட் மை வெஹைக்கிள் அம்சங்களை கொண்டுள்ளன. மற்றும் IP65-மதிப்பிடப்பட்ட வன்பொருளால் பாதுகாக்கப்படுகின்றன. சார்ஜர்கள் மற்றும் வாகனங்களில் நீட்டிக்கப்பட்ட கவரேஜுடன் மோட்டார் மற்றும் பேட்டரிக்கு வாழ்நாள் உத்தரவாதத்தையும் சிம்பிள் எனர்ஜி பிராண்ட் வழங்குகிறது.
சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் பேட்டரி ஆப்ஷன்:
பேட்டரி அடிப்படையில் இரண்டு எடிஷன்களின் செயல்திறனும் மாறுபடுகிறது. 4.5 kWh பேட்டரி பேக் கொண்ட எடிஷனானது 6.4 kW மற்றும் 52 Nm ஆற்றலை உற்பத்தி செய்து, 3.3 வினாடிகளில் 0–40 கிமீ வேகத்தை எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. அதேநேரம் 5 kWh பேட்டரி பேக் கொண்ட எடிஷனானது 8.8 kW மற்றும் 72 Nm ஆற்றலை உற்பத்தி செய்து அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. பூஜ்ஜியத்திலிருந்து 40 கிமீ வேகத்தை 2.55 வினாடிகளில் எட்டுகிறது.
பெங்களூரு, புனே, ஐதராபாத், கொச்சி மற்றும் ஹெய்பூர் ஆகிய நகரங்களில் உள்ள 61 ஷோ ரூம்களில் பயனர்கள் நேரடியாக சென்று வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் வாயிலாகவும் ஆர்டர் செய்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















