மஹிந்த்ராவின் புதிய 7 சீட்டர் - XUV 7XO காரின் சுவாரஸ்யமான தகவல்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

மஹிந்த்ரா நிறுவனத்தின் XUV 700 காரின் மேம்படுத்தப்பட்ட எடிஷனாக XUV 7XO மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

XUV 7XO காரின் விலை ரூ.13.66 லட்சத்தில் தொடங்கி ரூ.24.92 லட்சம் வரை நீள்கிறது

முன்பதிவு செய்த பயனர்களுக்கான விநியோகம் ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்குகிறது

இன்ஜின் அடிப்படையில் மாற்றமின்றி 2.2L mHawk டீசல் மற்றும் 2.0L டர்போ பெட்ரோல் ஆப்ஷன்களை கொண்டுள்ளது

XUV 7XO காரில் உள்ள இன்ஜின்கள் 450Nm & 182bhp, 380Nm & 200bhp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது

மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன், 8 வேரியண்ட்களில் மொத்தம் 27 ட்ரிம்களில் XUV 7XO விற்பனை செய்யப்படுகிறது

XUV 7XO டாப் என்ட் வேரியண்ட்களில் ஆல் வீல் ட்ரைவ் கான்ஃபிகரேஷன் வழங்கப்பட்டுள்ளது

XUV 7XO காரின் உட்புற அம்சங்களின் மேம்பாடு பெரும்பாலும் XEV 9e மற்றும் 9S மாடல்களின் தாக்கத்தை கொண்டுள்ளது

3 ஸ்க்ரீன் செட்-அப்கள், 540 டிகிரி சரவுண்டட் வியூ கேமரா ஆகிய புது அம்சங்கள் கவனத்தை ஈர்க்கின்றன