RE Hunter 350 Launched : ராயல் என்ஃபீல்டின் இந்திரன் சந்திரன் "ஹன்டர் 350"! அப்படி என்னதான் ஸ்பெஷல்?
ரஜினியின் தில்லுமுல்லு பட "இந்திரன் - சந்திரன்" போல ஹண்டர் 350-ம் "மெட்ரோ - ரெட்ரோ" என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்ட்.
ராயல் என்ஃபீல்டு தனது எடை குறைந்த பைக்கான ஹண்டர் 350-யை ரூ. 1.5 லட்சத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஜினியின் தில்லுமுல்லு பட "இந்திரன் - சந்திரன்" போல ஹண்டர் 350-ம் "மெட்ரோ - ரெட்ரோ" என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்ட்.
ராயல் என்ஃபீல்ட் பைக்குகளிலேயே எடை குறைவான இந்த ஹண்டர் 350, ரெட்ரோ மற்றும் மெட்ரோ என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. இதில் ஆரம்ப வேரியண்ட்டான ரெட்ரோவின் விலை ரூ. 1.5 (எக்ஸ்-ஷோரூம்) லட்சமாகவும்.. டாப் வேரியண்ட்டான மெட்ரோவின் விலை ரூ. 1.69 (எக்ஸ்-ஷோரூம்) லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல வருட சோதனைகளுக்குப் பிறகு, ராயல் என்ஃபீல்ட் ஒருவழியாக ஹண்டர் 350-யை ரூ. 1,49,900/- (எக்ஸ்-ஷோரூம்) என்ற கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்குகிறது. விற்பனைக்கு தயாராக உள்ள ஹண்டர் 350-யை ஷோரூமுக்கு சென்று டெஸ்ட் டிரைவ் செய்து கொள்ளலாம். ஹண்டர் 350-யின் அக்சஸரீஸ் மற்றும் நிறங்களை தேர்வு செய்து கொள்ள பிரத்யேக ஆப் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த ஆப் மூலம் டெஸ்ட் டிரைவ் மற்றும் முன்பதிவுகள் போன்றவற்றை செய்து கொள்ளலாம் அல்லது www.royalenfield.com என்ற இணையதளத்திலும் செய்து கொள்ளலாம்.
ரோட்ஸ்டர் வகையை சேர்ந்த இந்த ஹண்டர் 350-யை ராயல் என்ஃபீல்ட் நகர்ப்புற ட்ராஃபிக்கில் எளிதாக ஓட்டுவதற்கு ஏற்ப எடை குறைவாக வடிவமைத்துள்ளது. ஆம் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளிலேயே எடை குறைவான பைக் என்றால் அது ஹண்டர் 350 தான். இதன் எடை வெறும் 177 கிலோ மட்டுமே.
ராயல் என்ஃபீல்டின் மீட்டியார் 350 மற்றும் கிளாசிக் 350 பைக்குகளில் உள்ள அதே 350சிசி ஜே-சீரிஸ் பிளாட்ஃபார்ம் எஞ்சின் தான் ஹண்டரிலும் உள்ளது. எனவே 90 முதல் 100 கிலோமீட்டர் வேகம் வரை எந்த அதிர்வுகளும் இல்லாமல் சொகுசாக பயணிக்கலாம். 100 கிலோமீட்டருக்கு மேல் அதிர்வுகள் லேசாக எட்டிப் பார்க்கும். இருப்பினும் இந்த அதிர்வுகள் முந்தைய தலைமுறை 350 சிசி எஞ்சின் அளவுக்கு இல்லை என்பது சற்று ஆறுதல்.
17" இன்ச் ஸ்போக் வீல்களுடன் வரும் ரெட்ரோ வேரியண்ட் ஹன்டரில் முன்புறம் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ், சாதாரண டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் USB charging port போன்ற சில அடிப்படை வசதிகள் மட்டுமே இந்த ரெட்ரோ வேரியண்ட்டில் உள்ளது.
இன்னொருபுறம், மெட்ரோ வேரியண்ட் ஹண்டரில் டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம், அலாய் வீல்கள், முன்புறத்தில் அகலமான 110/70-17 டியூப்லெஸ் டயர்கள் மற்றும் பின்புறத்தில் 140/70-17 டியூப்லெஸ் டயர்கள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் டிஸ்ப்ளே, USB charging port மற்றும் வட்டமான பின்புற எல்இடி விளக்குகள் ஆகியவற்றுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் என வசதிகள் ஏராளம்.
ஹண்டர் 350-ன் எக்ஸ்-ஷோரூம் விலை விவரங்கள்:
Retro Factory - ₹. 1,49,900/-
Metro Dapper - ₹. 1,63,900/-
Metro Rebel - ₹. 1,68,900/-