டாடா பஞ்ச் காரில் ஆட்டோமேடிக் வாங்கலாமா? மேனுவல் கியர் வாங்கலாமா?
நீங்கள் நகரங்களில் டிராஃபிக் நிறைந்த பகுதிகளில் காரை அதிகமாக பயன்படுத்துவராக இருந்தால் உங்களுக்கான சிறந்த சாய்சாக ஆட்டோமேடிக் கியர் கார் இருக்கும். ஆனால் கரடுமுரடான பகுதிகளில்...
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய கார்களை தயாரிப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் டாடா நிறுவனம் வெளியிட்ட தியாகோ, அல்ட்ராஸ், டிகார், சஃபாரி, நெக்சன், ஹாரியர் ஆகிய 6 கார்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்த கார் விற்பனை சக்கைபோடு போட்டு வரும் நிலையில், பஞ்ச் என்ற புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது டாடா.
இதற்கு முந்தைய பதிவில் டாடா பஞ்ச் காரின் சிறப்பம்சங்கள் குறித்து நாம் பார்த்தோம் -
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த மினி எஸ்.யு.வி. ரக பஞ்ச் கார் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் என 2 வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் எது சிறந்தது என்பதை தற்போது பார்க்கலாம். 5 கியர்களை கொண்ட ஆட்டோமேடிக் வகை பஞ்ச் கார் விலை மேனுவல் காரை ஒப்பிடுகையில் 60 ஆயிரம் ரூபாய் அதிகம். நீங்கள் நகரங்களில் டிராஃபிக் நிறைந்த பகுதிகளில் காரை அதிகமாக பயன்படுத்துவராக இருந்தால் உங்களுக்கான சிறந்த சாய்சாக ஆட்டோமேடிக் கியர் கார் இருக்கும். ஏனெனில் டிராபிக்கில் அடிக்கடி கியரை மாற்றிக் கொண்டிருக்கும் தேவை உங்களுக்கு ஏற்படாது.
இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஆட்டோமேட்டிங் கியர் பாக்ஸ் நவீனமானவை. எந்த தடுமாற்றும் இன்றி இழுக்கும் திறன் கொண்டது. டாடா டியாகோவை விட இதில் இருக்கும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சிறப்பானது. இதில் இருக்கும் கிரீப் வசதி நகரங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் டென்சன் இல்லாமல் டிரைவ் செய்ய உதவும்.
அதே நேரம் காரை மெதுவாக இயக்கும்போதும் பெரிய அளவில் தடுமாற்றம் ஏதும் தென்படாது. ஆனால், அதை குறைந்தவேகத்தில் தள்ளும்போது இடையே இடையே நிற்பதை உணர முடியும். வரும் காலங்களில் இந்த மினி எஸ்.யு.வி. ரக பஞ்ச் காரை வாங்க நினைப்பவர்களுக்கு இதன் விலை ஒரு பெரிய விசயமாக இருக்காது. இதில் உள்ள ஹில் ஹோல்ட் வசதியின் மூலம் மலைகளில் பயணிக்க மேனுவல் கியர்களையும் இயக்க முடியும். அதே போல் ஆட்டோமெடிக் ரக காரில் வழங்கப்பட்டுள்ள Traction Pro mode மூலம் முன் சக்கரங்கள் அதிகம் சுழற்வதை கண்டு நிறுத்த முடியும்.
ஆனால், கரடு முரடான பாதைகள் பயணிப்பவர்களுக்கு ஆட்டோமேடிக் ரக கார் நல்ல தேர்வாக அமையாது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 13 முதல் 14 கிலோ மீட்டராக இருக்கும். டாடா பஞ்ச் காரின் ஆஃப் ரோட் அட்டகாசங்களை அனுபவிக்க விரும்புபவர்கள், மலைகள், கரடு முரடான பகுதிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் மேனுவல் கியர் காரை தேர்வு செய்வது நல்ல தேர்வாக இருக்கும்.