மேலும் அறிய

விற்பனை தேதியை மாற்றிய ஓலா ஸ்கூட்டர் நிறுவனம்: தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்!

இதனால் முன்பதிவு செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் நேராது என அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபல ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் ஆன்லைன் விற்பனை நேற்று தொடங்கப்பட்டது. முன்பதிவு செய்த நபர்களுக்கு அடுத்த மாதம் ஸ்கூட்டர்கள் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் தனது வலைத்தள பக்கங்களில் தெரிவித்திருந்தது.இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓலா ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு விற்பனை தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  பவிஷ் அகர்வால் “ எங்கள் ஓலா எஸ் 1 ஸ்கூட்டருக்கான விற்பனையை இன்று தொடங்க  இருப்பதாக நாங்கள் உறுதியளித்திருந்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, இன்று  விற்பனைக்கான எங்கள் வலைத்தளத்தில் நேரலை செய்வதில் பல தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தோம். எனவே கோளாறுகளுக்கு தீர்வு கண்டுவிட்டு, வருகிற செப்டம்பர் 15 எங்கள் விற்பனையை மீண்டும் துவங்குவோம் , இதனால் முன்பதிவு செய்த நபர்களுக்கு எவ்வித சிக்கல்களும் நேராது “ என தெரிவித்துள்ளார்.

ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டியது!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விருப்பம் உள்ள நபர்கள் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் ஸ்கூட்டரை வாங்க முடியாது. www.olaelectric.com  என்ற இணையதள முகவரிக்கு சென்று, பெயர் , முகவரி, வாகன விருப்ப தேர்வு உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து  499 ரூபாய் என்ற முன்பதிவு தொகையை செலுத்தி ரிசர்வ் செய்துக்கொள்ள வேண்டும்.

முன் தொகையை அதிகமாக செலுத்த விரும்பும் நபர்கள் ஓலா எஸ் 1 க்கு ₹ 20,000 மற்றும்  ஓலா எஸ் 1 ப்ரோவுக்கு ₹ 25,000 முன்பணம் செலுத்தலாம். மீதமுள்ள தொகையை ஸ்கூட்டர் இன்வாய்ஸ் செய்யும்போது செலுத்திக்கொள்ளும் வசதிகளையும் இணைத்துள்ளனர்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டீலர்களோ , ஷோரூம்களோ தற்போது கிடையாது என்பதால் வலைத்தளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை தேதியை மாற்றிய  ஓலா ஸ்கூட்டர் நிறுவனம்: தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்!
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் IDFC , HDFC ,  ICICI, Kotak Mahindra Prime,  Yes Bank, IDFC First Bank மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட  பல வங்கிகளுடன் இணைந்து சில கட்டண சலுகைகளையும்  வழங்குகிறது. 

EMI ஆஃபர்களை பொறுத்தவரையில் ,ஓலா எஸ் 1 EMI  ₹ 2,999 ரூபாயிலிருந்தும்   எஸ் 1 ப்ரோவின் EMI ₹ 3,199 ரூபாயிலிருந்தும் தொடங்குகிறது.

Ola electric scooters | விற்பனைக்கு வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்.. முன்பதிவு செய்வது எப்படி?
வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரின் ஆடரை கேன்சல் செய்ய விரும்பினால். டெலிவரிக்கு ஸ்கூட்டர் தயாரவதற்கு முன்னதாக செய்ய வேண்டும். பிடித்தம் இல்லாமல் செலுத்திய முன்பணத்தை  அப்படியே பெற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஆப்ஸ் மூலம் காப்பீடு செய்துக்கொள்ளலாம். இதனை  ஐசிஐசிஐ லோம்பார்ட்  வழங்குகிறது.பதிவு செய்வதற்கு முன்னதாக சேதம் குறித்தான காப்பீட்டு திட்டங்களை சரியாக கவனிக்க வேண்டியது அவசியம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget