மேலும் அறிய

New Maruti Dzire 2024: தயாரானது புதிய மாருதி டிசையர் 2024 - அறிமுகம் எப்போது, காரின் புதிய அம்சங்கள் என்ன?

New Maruti Dzire 2024: மாருதியின் புதிய டிசையர் கார் மாடல் அறிமுக தேதி உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

New Maruti Dzire 2024: மாருதியின் புதிய டிசையர் கார் மாடலின் தொடக்க விலை, ரூ.7 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மாருதியின் புதிய டிசையர்:

மாருதி சுசூகி நிறுவனம் தனது புதிய தலைமுறை டிசையரை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்  நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.  டிசையர் கார் எந்த காலத்திலும் அந்த நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருப்பதால், இது அதன் மிக முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும். டிசையர் மிகவும் பிரபலமானது மற்றும் புதிய தலைமுறை மேம்படுத்தல்களுடன் அதிக பிரீமியம் அம்சங்களையும் பெறுகிறது.

வடிவமைப்பு விவரங்கள்:

ஸ்விஃப்டை விட ஸ்டைலிங்கில் புதிய டிசையர் அதிகம் வேறுபடுத்தப்படும். இது புதிய தலைமுறை காரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். அதே நேரத்தில் உட்புறமும் மாற்றியமைக்கப்படுகிறது. உட்புறம் புதிய ஸ்விஃப்ட் வடிவமைப்பை போன்றே அடுக்கு டேஷ்போர்டுடன் இருக்கும், ஆனால் அப்ஹோல்ஸ்டரி வேறுபடுத்துவதற்காக லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இதையும் படியுங்கள்: PF New Rule: இனி நோ வெயிட்டிங்..! 6 மாதங்களுக்கு முன்பாகவே ரூ.1 லட்சம், பி.எஃப்., பயனாளர்கள் ஹாப்பி

உட்புறத்தில் இது ஸ்விஃப்ட்டின் ஆல் பிளாக் தீமில் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. 9 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள், காலநிலை கட்டுப்பாடு, சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களை புதிய டிசையரில் எதிர்பார்க்கலாம். ஸ்விஃப்ட் போலல்லாமல், புதிய டிசையர் பெரும்பாலும் 360 டிகிரி கேமராவைப் பெறும். 6 ஏர்பேக்குகளும் ஸ்டேண்டர்டாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: Indian Govt: ஆதார், பான் விவரங்களுக்கு ஆபத்து - இணையதள பக்கங்களை முடக்கி மத்திய அரசு அதிரடி

இன்ஜின் விவரங்கள்:

புதிய டிசையர் ஆனது ஸ்விஃப்ட் மாடலில் உள்ள புதிய இன்ஜினை பகிர்ந்து கொள்ளும் என்றாலும், கூடுதல் எடைக்கு ஏற்ப சில மாற்றங்களைப் பெறலாம். புதிய டிசையர் முந்தைய மாடலை விட சற்று அதிக விலை கொண்டதாக இருக்கும். எனவே பெட்ரோல் மேனுவல் எடிஷனின் விலை ரூ. 7 லட்சத்தில் இருந்து தொடங்கலாம்.  அதே சமயம் டாப்-எண்ட் பெட்ரோல் ஆட்டோமேடிக் எடிஷனின் புதிய அம்சங்கள் காரணமாக, அதன் விலை ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் புதிய தலைமுறை டிசையர், அண்மையில் அறிமுகமான புதிய ஸ்விஃப்ட் போலவே அரீனா விற்பனை நிலையங்களிலும் விற்கப்படும். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இது தற்போதைய காம்பாக்ட் செடான்களுக்கு போட்டியாக இருக்கும். அதே நேரத்தில் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்த்து,  சப் காம்பாக்ட் SUVகளுடனும் போட்டியிடும் என கருதப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget