MG Windsor vs Tata Nexon EV: நெக்ஸானை விட சிறந்ததா விண்ட்சர்? ரேஞ்ச் எப்படி? சிட்டி, நெடுஞ்சாலைக்கு எது பெஸ்ட்?
MG Windsor vs Tata Nexon EV: டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி விண்ட்சர் மின்சார கார்களின், நிஜ உலக ரேஞ்ச் எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

MG Windsor vs Tata Nexon EV: டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி விண்ட்சர் மின்சார கார்களின், ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா நெக்ஸான் Vs எம்ஜி விண்ட்சர்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி விண்ட்சர் மின்சார கார்கள், நீளத்தில் சற்றே வேறுபட்டு இருந்தாலும், இயற்கையாகவே இரண்டும் வலுவான போட்டியாளர்களாக திகழ்கின்றன. இவற்றில் விலை, பேட்டரி அளவு, கோரப்படும் ரேஞ்ச் ஆகியவை ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக உள்ளன. இந்நிலையில் தான் இரண்டு மின்சார கார்களில் எது, நிஜ உலகில் அதிகப்படியான ரேஞ்ச் அளிக்கிறது என்ற சோதனையை AutoCarIndia நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதில் 38KWh பேட்டரி கொண்ட எம்ஜி விண்ட்சர் காரும், 45KWh பேட்டரி கொண்ட டாடா நெக்ஸான் காரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான் Vs எம்ஜி விண்ட்சர் - அம்சங்கள், விவரங்கள்
| அம்சங்கள் | எம்ஜி விண்ட்சர் | டாடா நெக்ஸான் |
| பேட்டரி (KWh) | 38 | 45 |
| அதிகப்படியான சக்தி (hp) | 136 | 144 |
| அதிகப்படியான டார்க் (Nm) | 200 | 215 |
| கோரப்படும் ரேஞ்ச் (ARAI) | 332 | 489 |
| 7.2 KWh சார்ஜிங் ஸ்பீட் | 7 மணி நேரம் | 6.6 மணி நேரம் |
| டிசி சார்ஜிங் ஸ்பீட் | 45 நிமிடங்கள் (45KW) | 40 நிமிடங்கள் (40KW) |
| விலை | ரூ.14.00 - 16.30 லட்சம் | ரூ.13.99 - 17.29 லட்சம் |
நெக்ஸான் காரானது பெரிய அளவிலான பேட்டரியை கொண்டிருப்பதோடு, அதிக சக்தி வாய்ந்த மோட்டாரையும் பயன்படுத்துகிறது. இதன் டாப் என்ட் வேரியண்ட்களில் ADAS தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அதேநேரம், லெவல் 2 ADAS-ஐ வாங்க விரும்பினால் 52.9KWh பேட்டரி பேக்கை கொண்ட விண்ட்சர் ப்ரோ மாடலை தேர்வு செய்ய வேண்டும்.
டாடா நெக்ஸான் Vs எம்ஜி விண்ட்சர் - நிஜ உலக ரேஞ்ச்
| சோதனை விவரங்கள் | விண்ட்சர் | நெக்ஸான் |
| நகர சாலையில் சோதனை ரேஞ்ச் | 327 கி.மீ., | 355 கி.மீ., |
| நெடுஞ்சாலையில் சோதனை ரேஞ்ச் | 289 கி.மீ., | 345 கி.மீ., |
| ஒட்டுமொத்த சாலை சோதனை ரேஞ்ச் | 308 கி.மீ., | 350 கி.மீ., |
| பேட்டரியின் செயல்திறன் | 8.1 கி.மீ.,/KWh | 7.79 கி.மீ.,/KWh |
எம்ஜி விண்ட்சர் காரானது 38kWh பேட்டரியை கொண்டு நகர பயன்பாட்டில் 327 கிமீ மற்றும் நெடுஞ்சாலையில் 289 கிமீ ரேஞ்ச் அளித்துள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சராசரியாக 308 கிமீ ஆகும். இது நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை காட்டிலும் 24 கிமீ குறைவாகும். அதேநேரம், விண்ட்சர் 8.1 கிமீ/கிமீ என்ற அட்டகாசமான பேட்டரி திறனை கொண்டுள்ளது. இதற்கிடையில், நெக்ஸான் நகர பயன்பாட்டில் 355 கிலோ மீட்டர் ரேஞ்சையும், நெடுஞ்சாலையில் 345 கிமீ ரேஞ்சையும் வழங்கியது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சராசரியாக 350 கிமீ ரேஞ்ச் அளிக்கிறது. இது நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டதை காட்டிலும், 139 கிமீ குறைவே. அதோடு, நெக்ஸானில் உள்ள பேட்டரியின் திறன் என்பது 7.79 கிமீ/கிமீ மட்டுமே ஆகும். எனவே Nexon EV-யின்பெரிய பேட்டரி வின்ட்சரை விட 42 கிமீ தூரம் ரேஞ்ச் அளிக்கும்போது, MG EVயின் பேட்டரி அதிகப்படியான செயல்திறனை கொண்டுள்ளது.
டாடா நெக்ஸான் Vs எம்ஜி விண்ட்சர் - சோதிக்கப்பட்ட சூழல்
ஆட்டோ கார் இந்தியா நிறுவனம் இந்த சோதனைகளை மேற்கொண்டபோது, காரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டது. டயர் பிரஷர் உற்பத்தியாளர்களின் அறிவுறுத்தலின்படி சீராக பராமரிக்கப்பட்டது. நகரத்திலும் நெடுஞ்சாலையிலும் கார் ஒரு நிலையான சுழற்சியில் இயக்கப்பட்டதோடு, சில சராசரி வேகம் பின்பற்றப்பட்டுள்ளது. இறுதியில், பயன்படுத்தப்பட்ட சார்ஜின் சதவிகிதத்தின் அடிப்படையில் காரின் ரேஞ்ச் கணக்கிடப்பட்டது. சோதனையின் போது க்ளைமேட் கண்ட்ரோல் 22 டிகிரி செல்சியஸ், விசிறி வேகம் ஆட்டோமேடிக் மோடில் நிறுத்தப்பட்டன. ஆடியோ சிஸ்டம், விளக்குகள் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் (பொருத்தப்பட்டிருந்தால்) போன்ற பிற மின்சாரங்கள் தேவைப்படும்போது பயன்படுத்தப்பட்டன.





















