MG Mifa 9 MPV: ஆத்தி எத்தா தண்டி..! 5.2மீ நீளத்தில் எம்ஜி மின்சார மிஃபா 9 கார் - கொட்டிக் கிடக்கும் அம்சங்கள்
MG Mifa 9 MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் மின்சார மிஃபா 9 எம்பிவி கார் மாடல், அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
MG Mifa 9 MPV: சைபர்ஸ்டர் மாடலுக்குப்பிறகு MG மோட்டார் இந்தியாவின் பிரீமியம் ரீடெய்ல் ஆப்ஷன் வாயிலாக, உள்நாட்டில் விற்கப்படும் இரண்டாவது மாடல் Mifa 9 MPV ஆகும்.
எம்ஜி மிஃபா 9 எம்பிவி
MG Motor India அதன் பிரீமியம் ரீடெய்ல் நெட்வொர்க், MG Select இன் செயல்பாடுகளைத் தொடங்கத் தயாராக உள்ளது. புதிய பிரீமியம் நெட்வொர்க் மூலம் விற்கப்படும் முதல் தயாரிப்பான சைபர்ஸ்டர் ரோட்ஸ்டருக்குப் பிறகு, Mifa 9 MPV உடனடியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. முன்னதாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் சொகுசு எலக்ட்ரிக் எம்பிவியை காட்சிப்படுத்திய எம்ஜி மோட்டார் இந்தியா, அதை மீண்டும் ஜனவரியில் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்த உள்ளது. வணிகரீதியான வெளியீடு மார்ச் 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.65 லட்சம் விலையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டார் விவரங்கள்:
Mifa 9 முதன்முதலில் 2021 இல் முழுமையான மின்சார மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அததொடர்ந்து, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், வேறு சில பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் லே-அவுட் அமைப்பைப் பயன்படுத்தும் G90 ஐப் போலவே, மின்சார Mifa 9 ஆனது 90kWh லித்தியம் பேட்டரியுடன் முன்-மோட்டார், ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் லே-அவுட் அமைப்பை கொண்டுள்ளது. மோட்டார் 245hp மற்றும் 350Nm வெளியிடுகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 430கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.
வடிவமைப்பு விவரங்கள்:
,Mifa 9 வாகனமானது 5.2 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 1.8 மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. இது கியா கார்னிவலை விட பெரியது மற்றும் வெல்ஃபயரை விட நீளமாகவும் அகலமாகவும் இருக்கிறது. விசாலமான இடவசதியுடன், Mifa 9 வாகனமானது 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன்களுடன் வருகிறது. வெப்பமூட்டும், காற்றோட்டம் மற்றும் மசாஜ் கொண்ட முன் மற்றும் பின்புற பவர்ட் இருக்கைகள், மடிப்பு-வெளியே ஓட்டோமான் இருக்கைகள், சக்தியூட்டப்பட்ட பின்புற-ஸ்லைடிங் கதவுகள், இரட்டை சன்ரூஃப்கள் மற்றும் பின்புற பொழுதுபோக்கு திரைகள் என ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. வடிவமைப்பைப் பொறுத்தவரை, பெரும்பாலான MPVகளைப் போலவே ஒரு பாக்ஸி சில்ஹவுட்டைக் கொண்டிருந்தாலும், Mifa 9 சில குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களைப் பெறுகிறது. முன்பகுதி உயரமாகவும் நிமிர்ந்தும் உள்ளது மற்றும் முழு அகல LED லைட் பார் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் கியா கார்னிவல் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக Mifa 9 கார் மாடல் வெளியாக உள்ளது.
விலை கட்டுப்படியாகுமா?
Mifa 9 ஒரு முக்கிய பிரிவில் அறிமுகமாக இருந்தாலும், அதில் பல போட்டியாளர்கள் உள்ளனர். திட்டமிடப்பட்ட விற்பனை இலக்குகளை அடைவதற்கு அப்பால், Mifa 9 பிராண்டின் விலையை ஏற்று, MG MPVக்கு இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் செலுத்தத் தயாராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.