MG Comet: எம்.ஜி. நிறுவனத்தின் புதிய குட்டி மின்சார கார்... இந்தியாவில் தொடங்கியது முன்பதிவு..! விலை என்ன?
MG Comet: எம்.ஜி. நிறுவனத்தின் புதிய மின்சார காரானா எம்ஜி கோமேட்டின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
எம்.ஜி. நிறுவனத்தின் புதிய மின்சார கார் எம்.ஜி. கோமேட்டின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. விலை விவரங்களும் கூடுதலாக உள்ளே தரப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடக்கம்:
கார் நிறுவனங்களில் பிரபல நிறுவனமாக திகழ்வது எம்.ஜி. நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் புதிய மின்சார காரான கோமேட்டின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. அதன்படி, முன்பதிவு விலை 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விலை, இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இம்மாத இறுதியில் இந்த காரின் விநியோகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று பயனாளர்கள் தங்களுக்கான காரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
எம்.ஜி. நிறுவனம்:
அமெரிக்காவிற்கு எப்படி ஒரு ஃபோர்ட் நிறுவனமோ, அப்படி தான் இங்கிலாந்திற்கு எம்.ஜி. நிறுவனமும். மோர்ரிசன் கராஜ் எனப்படும் இந்த நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், உள்நாட்டு சந்தையில் தற்போது அதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு வசதிகளை கொண்ட மற்றும் அடுத்தடுத்து மேம்படுத்தப்பட்ட பல்வேறு சொகுசு மற்றும் மின்சார கார் மாடல்களையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய மின்சார காராக, MG Comet இணைந்துள்ளது.
MG Comet கார் அறிமுகம்:
புதிய அறிவிப்பின்படி, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய கோமெட் EV மாடல் வுலிங் ஏர் EV கார் மாடலை தழுவி வடிவமைத்துள்ளது. உள்நாட்டு சந்தையில் புதிய எம்ஜி கோமெட் EV மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 ஆகிய மின்சார கார்களுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.
5 வண்ணங்களில் புதிய கார்:
கடந்த மாதம் எம்ஜி நிறுவனம் இந்தியாவுக்கான கோமெட் EV மாடல் விவரங்களை அறிவித்து இருந்தது. அதன்படி புதிய கொமெட் மின்சார கார் மாடல் வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பிங்க் ஆகிய ஐந்து விதமான வண்னங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
பேட்டரி விவரம்:
சர்வதேச சந்தையில் இந்த மாடல் 17.3 கிலோவாட் ஹவர் மற்றும் 26.7 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 200 கிலோமீட்டர்கள் மற்றும் 300 கிலோமீட்டர்கள் தூரம் வரையிலான ரேஞ்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
காரின் சிறப்பம்சங்கள்:
க்ரோம் இன்சர்ட்கள், ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், பின்புற பம்பரில் நம்பர் பிளேட், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புற டிசைனை பொருத்தவரை கோமெட் மின்சார காரில் செங்குத்தான எல்.ஈ.டி. முகப்பு விளக்குகள், எல்.ஈ.டி பின்புற விளக்குகள், டிஆர்எல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள், டூயல் டோன் முன்புற பம்பர் மற்றும் சார்ஜிங் போர்டின் மேல் எல்.ஈ.டி லைட் பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.