மேலும் அறிய

MG Astor SUV: சூரியனைப் போன்ற முகப்பு.. புதிய தொழில்நுட்பம்.. செப்டம்பர் 15ல் MG Astor SUV அறிமுகம்!

வரும் செப்டம்பர் 15 அன்று, பிரிட்டிஷ் தயாரிப்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் MG SUV கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. எப்படி இருக்கப் போகிறது MG Astor SUV?

இறுதியாக அது நடக்கப் போகிறது! ஆம், இந்தியாவில் MG Astor கார் எப்போது வெளிவரும் எனக் கார்  ஆர்வலர்களிடையே இருந்து ஆர்வத்திற்கான பதில் கிடைத்திருக்கிறது. வரும் செப்டம்பர் 15 அன்று, பிரிட்டிஷ் தயாரிப்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் MG SUV கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. எனினும், இதன் விலையை அறிமுக நாளிலேயே அறிவிப்பார்களா என்பது சந்தேகம். எனினும் இந்தக் காரின் விற்பனை குறித்தோ, வெளியீட்டு நாள் குறித்தோ எந்த அறிவிப்பும் வரவில்லை. MG Motor India நிறுவனம் ஏற்கனவே இந்த Astor SUV குறித்த ஆர்வத்தை கார் ஆர்வலர்களிடம் விதைத்து வந்தது. எப்படி இருக்கப் போகிறது MG Astor SUV?

MG Motor India ஏற்கனவே MG Astor SUV காரின் டெக்னாலஜி அம்சங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. இதில் SAE level 2 தானியங்கி ட்ரைவிங் அம்சம், AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் பெர்சனல் அசிஸ்டண்ட், மேப், பொழுதுபோக்கு, பார்க்கிங், உணவு டெலிவரி முதலான பிற தேவைகளுக்காக AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் i-Smart Hub வசதி, Apple CarPlay, Android Auto ஆகிய தொழில்நுட்பங்கள் பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றன. 

MG Astor SUV: சூரியனைப் போன்ற முகப்பு.. புதிய தொழில்நுட்பம்.. செப்டம்பர் 15ல் MG Astor SUV அறிமுகம்!

இந்தக் காரின் முழு வடிவம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இதன் முன்புறம் எப்படி இருக்கப் போகிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தக் காரின் முகப்பு `cosmic lines and forms’ என்ற கலை வடிவத்தின் அடிப்படையில் இருப்பதோடு, இதில் டங்க்ஸ்டன் உலோகம் பொருத்தப்பட்டு, அது சூரியனைப் போல காட்சிப்படுத்தப்படும். 

Astor காரின் என்ஜின் குறித்தோ, பிற பாகங்களைக் குறித்தோ MG Motor India இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், இந்தக் காரில் 2 வகையான பெட்ரோல் என்ஜின்களின் அடிப்படையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. முதலாவது, 118 bhp, 150 Nm என்ற ஆற்றலைக் கொண்ட 1.5 லிட்டர் என்ஜின்; 161 bhp, 230 Nm என்ற ஆற்றலைக் கொண்ட 1.3 லிட்டர் என்ஜின். இந்த இரண்டாவது என்ஜின் டர்போ சார்ஜ் செய்யப்பட்டு, கூடுதல் அம்சத்தோடு வெளியாகிறது. மேலும், இந்தக் காரில் MG நிறுவனம் ஆட்டோமேடிக், மேனுவல் ஆகிய இரு வகையிலான கியர்பாக்ஸ்களையும் வெளியிடும் எனவும் தெரிகிறது. 

MG Astor SUV: சூரியனைப் போன்ற முகப்பு.. புதிய தொழில்நுட்பம்.. செப்டம்பர் 15ல் MG Astor SUV அறிமுகம்!

இது Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq,  Volkswagen Taigun ஆகிய கார்களுக்குப் போட்டியாக களமிறங்கவுள்ளதாக கார் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் MG நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பாக இந்தக் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget