MG Astor: புத்தாண்டில் MG Astor கார் வாங்கலாமா? மைலேஜ், விலை, தரம் - இதோ முழு விவரம்!
MG Astor Car Review: எம்ஜி ஆஸ்டர் காரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி நிறுவனம். இன்று இந்திய சாலையில் எம்ஜி நிறுவனத்தின் கார்கள் பலவும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜி நிறுவனத்தின் கார்களில் ஒன்று MG Astor ஆகும். இதன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
MG Astor:
இந்த கார் ஒரு எஸ்யூவி கார் ஆகும். மிகவும் சொகுசான மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இந்த காரை வடிவமைத்துள்ளனர். இந்த காரில் 1.3 லிட்டர் டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரிலே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்டும் உள்ளது.
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.52 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.14 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 11 வேரியண்ட்கள் உள்ளது.
வேரியண்ட்களும், விலைகளும்:
Astor Sprint 1.5 MT (Ivory) - ரூ.11. 52 லட்சம்
Astor Shine 1.5 MT (Ivory) - ரூ.14.01 லட்சம்
Astor Select 1.5 MT (Ivory) - ரூ.16.51 லட்சம்
Astor Select 1.5 CVT (Ivory) - ரூ.16.57 லட்சம்
Astor Sharp Pro 1.5 CVT (Ivory) - ரூ.17.93 லட்சம்
Astor Sharp Pro 1.5 CVT (Ivory) Dual Tone - ரூ.18.89 லட்சம்
Astor Savvy Pro 1.5 CVT Sangria - ரூ.18.89 லட்சம்
Astor Savvy Pro 1.5 CVT (Ivory) Dual Tone - ரூ.19.14 லட்சம்
Astor Savvy Pro 1.5 CVT Sangria Dual Tone - ரூ.19.14 லட்சம்
மைலேஜ்:
இந்த காரில் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. லெவல் 2 அடாஸ் வசதி கொண்டது. இந்த கார் 14.82 கிலோமீட்டர் முதல் 15.43 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
ஓட்டுவதற்கு மிகவும் வசதிகரமாகவும், செளகரியமாகவும் இந்த கார் உள்ளது. இந்த கார் 5 சீட்டர் வாகனம் ஆகும். 138 பிஎச்பி குதிரை ஆற்றலும், 220 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது.
பாதுகாப்பு வசதிகள்:
இந்த காரில் 6 ஏர்பேக் உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. ஹில் ஹோல்ட் வசதி உள்ளது. ஹில் டிஸ்சென்ட் கன்ட்ரோல் உள்ளது. டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. டயர் ப்ரசரிங் மானட்டர் வசதியும், ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷனும் உள்ளது.
எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் ஆட்டோ ஹோல்ட் வசதியுடன் உள்ளது. 10 இன்ச் டச்ஸ்கிரீன் வசதி உள்ளது. கால்கள் நீட்டுவதற்கும் மிகவும் செளகரியமாக இந்த கார் உள்ளது. NCAP தர சோதனையில் 5 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா குஷக், ஹோண்டா எலிவேட், சிட்ரோன் கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.





















