Maruti Jimny Discount: போடு.. ரூ.1 லட்சம் ஆஃபர்.. ஜிம்னி காருக்கு தள்ளுபடி அறிவித்த மாருதி!
மாருதி சுசுகியின் ஜிம்னி காருக்கு ரூபாய் 1 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான சாலையிலும் அசத்தலாக செல்லும் ஜிம்னிக்கு அறிவிக்கப்பட்ட சலுகை வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்வது மாருதி சுசுகி. தனது போட்டி நிறுவனங்களான டாடா, டொயோட்டோ, ஹுண்டாய்க்கு நிகராக பல்வேறு புதிய புதிய மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.
ஜிம்னி காருக்கு 1 லட்சம் ஆஃபர்:
அந்த வகையில், மாருதி சுசுகியின் கம்பீரமான எஸ்யூவி மாடல் கார்தான் ஜிம்னி. ஆகஸ்ட் மாதம் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தள்ளுபடி தந்து வரும் சூழலில், தற்போது மாருதி சுசுகியும் தனது ஜிம்னி காருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளனர். அதாவது, ரூபாய் 1 லட்சம் தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளனர்.
இந்த சலுகை ஆல்ஃபா வேரியண்ட்க்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர். எக்சேஞ்ச் அல்லது இதர கார்ப்பரேட் சலுகை என்று இல்லாமல் நேரடியாக காரின் விலையில் இருந்து ரொக்கத் தள்ளுபடியாகவே இந்த 1 லட்சத்தை தள்ளுபடி செய்வதாக மாருதி அறிவித்துள்ளது.
ஜிம்னிக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி:
சென்னையைப் பொறுத்தமட்டில் மாருதி ஜிம்னி காரின் விலை ரூபாய் 12.76 லட்சம் முதல் ரூபாய் 14.96 லட்சம் வரை விற்கப்படுகிறது. மஹிந்திரா தார் போன்ற கம்பீரமான தோற்றத்தை இந்த ஜிம்னி காெண்டுள்ளது. இந்த கார் இலகுவான தார்ச்சாலை மட்டுமின்றி கரடுமுரடான மலைப்பகுதிகளில் ஓட்டுவதற்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டு்ள்ளது.
இ்த்தனை சிறப்புகளா?
இந்த கார் பெட்ரோலில் ஓடும் திறன் கொண்டது. 1.5 லிட்டர் K15B பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 103 பிஎச்பி திறன் கொண்டது. 134.2 என் எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த கார் 5 கியராகவும், 4 டார்க் கன்வர்டர் ஆட்டோமெட்டிக் கியரிலும் இந்த கார் உள்ளது. சாதாரண சாலைகள் மற்றும் கரடுமுரடான சாலைகளில் செல்ல இந்த கார் மிக மிக உதவிகரமானதாக அமைகிறது.

காரில் பாதுகாப்பு அம்சங்கள் தரமானதாக அமைந்துள்ளது. 6 ஏர்பேக்குகள் இந்த காரில் உள்ளது. ஏபிஎஸ் வசதி இபிடி-யுடன் உள்ளது. மலைப்பகுதிகளில் ஓட்டுவதற்காகவே ஹில்-ஹோல்ட் கன்ட்ரோலும் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரேக் அசிஸ்ட், பார்க்கிங் கேமரா உள்ளிட்ட ஏராளமான வசதிகள் ஆஃப் ரோடு வசதிக்காகவே இந்த ஜிம்னியில் உருவாக்கப்பட்டுள்ளது.
வசதிகள்:
மேலும், ஆட்டோமெட்டிக் எல்இடி முகப்பு விளக்குகள், பனி விளக்குகள், வண்டியை ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கு பட்டன், ஆட்டோமெட்டிக் சுற்றுச்சுழல் கன்டரோல், கேபினின் பல வசதிகள் கொண்ட திரை ஜிம்னியில் உள்ளது.
பொதுவாக, மலைப்பிரதேசங்களில் வாகனங்கள் ஓட்ட விரும்புபவர்களின் தேர்வுகளில் ஜிம்னி முக்கிய அங்கமாக உள்ளது. கரடு முரடான இடங்களில் ஓட்டுவதற்கான வாகனங்களிலும் ஜிம்னி முதன்மையாக உள்ளது. இதனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை பலருக்கும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஜிம்னியில் ஜெடா மற்றும் ஆல்ஃபா என்ற இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. மாருதி ஜெடாவிற்கு எந்த சலுகையையும் அளிக்கவில்லை.
இந்த காரின் எஞ்ஜின் 1462 சிசி திறன் கொண்டது. இந்த காரின் டேங்க் 40 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் திறன் கொண்டது. இந்த காரின் நீளம் 3985 மி.மீட்டர், அகலம் 1645 மி.மீட்டர்,உயரம் 1720 மி.மீட்டர் ஆகும். இந்த காரின் ஸ்டீரிங் பவர் ஸ்டீரிங்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புற ப்ரேக் டிஸ்க் ப்ரேக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அலாய் மற்றும் ஸ்டீல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்வதற்கான கார்களிலும் ஜிம்னி முக்கியமான தேர்வாக வாகன ஓட்டிகள் மத்தியில் உள்ளது.





















