புரதச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருத்துவர்கள் சாப்பிட தவிர்க்க அறிவுறுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது.
ஆஸ்துமாவைத் தூண்டும் புகை, தூசி உள்ளிட்டவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
மருத்துவர்களிடம் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.
உடல் எடையை சரியான அளவு பராமரிக்க வேண்டியது அவசியம். அதிக உடல் எடை சுவாசப்பிரச்சினையை உண்டாக்கும்.
தேவையற்ற மன அழுத்தம் ஆஸ்துமா பிரச்சினையை உண்டாக்கும்.
உடலுக்கு போதுமான அளவு உறக்கம் இருக்க வேண்டும். போதுமான அளவு ஓய்வு நல்ல சுறுசுறுப்பை தரும்.
ஆரோக்கியமான உடல்நலனை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியம். நடைபயிற்சி உள்ளிட்ட அடிப்படை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நுரையீரல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோகா, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
காற்று மாசு அதிகம் இருக்கும் இடங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.